Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொருளாதார அபிவிருத்தி பசில் ராஜபக்ஸவுக்கு நெருக்கமான ஆலோசகர்கள் எவரும் இல்லை. இலங்கையில் அவருக்கு நண்பர்களை விட எதிரிகள் தான் அதிகம் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அனுப்பிய இரகசிய தகவல் குறிப்பில் உள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

2007 மே 15ம் திகதி கொழும்பில் இருந்த அப்போதைய அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக்கினால் அனுப்பி வைக்கப்பட்ட இந்த தகவல் குறிப்பை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பசில் ராஜபக்ஸ ஆட்களை விலைக்கு வாங்கும் பழக்கத்தைக் கொண்டவர் என்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சில் பணியாற்றியபோது, எவ்வொரு திட்டத்திலும் தனக்கு 10 வீதம் தரகுப்பணம் கேட்பதால் பசில் ராஜபக்ச "திருவாளர் பத்து வீதம்" (Mr. Ten Percent) என்ற செல்லப்பெயரை சம்பாதித்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான அரசியல் விவகாரங்கள் குறித்து ஜனாதிபதி மகிந்தவுடன் பசில் ராஜபக்ஸவுடன் தான் கலந்துரையாடுகிறார்.

2005 ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் வாக்குகளை நசுக்குவதற்கு விடுதலைப் புலிகளுடன் உடன்பாடு செய்து கொண்டது மற்றும் 2007இல் அமைச்சரவை மாற்றம், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளும் கட்சிக்குள் இழுத்துக் கொண்டது போன்றவற்றில் பசில் ராஜபக்ஸ செல்வாக்கு செலுத்தியுள்ளார் எனவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட கல்வியறிவு மற்றும் துறைசார்ந்த அனுபவங்கள் ஏதும் இல்லாத பசில் ராஜபக்ஸவே ஜனாதிபதிக்கு ஆலோசனைகளை வழங்குகிறார்.

மாத்தறையிலும் காலியிலும் கல்வி கற்ற அவர், காலியில் கல்வி கற்றபோது அவர் பலமுறை பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அவரது பாடசாலை நண்பர்கள் தெரிவித்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் அனுப்பிய இரகசிய தகவல் குறிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1970ம் ஆண்டு பெலியத்தை தொகுதியில் மகிந்த ராஜபக்ச முதல் முறையாகப் போட்டியிட்ட போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்த பசில் அவருக்கு ஆதரவாகப் பணியாற்றியிருந்தார். ஆனால், 1977இல் ஐதேகவில் இணைந்த பசில் தனது சகோதரருக்கு எதிராகவே வேலை செய்தார்.

தற்போதுள்ள பதவியிலும் கூட அவர் குறிப்பிடத்தக்க ஊழல்களை செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் றொபேட் ஓ பிளேக் அனுப்பிய தகவல் குறிப்பில் உள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

0 Responses to பசில் ராஜபக்ஸவுக்கு நண்பர்களை விட எதிரிகள் அதிகம்: விக்கிலீக்ஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com