அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத்தில் தங்கியிருந்தார்.
இதை கண்டறிந்த அமெரிக்க இராணுவம் கடந்தாண்டு மே மாதம் 1ம் திகதி அவரை சுட்டுக் கொன்றது.
இந்த சம்பவத்தை படமாக ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனர் காதரின் பிஜெலோ இயக்கியுள்ளார். இப்படம் வருகிற அக்டோபரில் வெளியிடப்படுகிறது.
பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தனக்கு சில தகவல்களை தந்து உதவும்படி இயக்குனர் காதரின் பிஜெலோ அமெரிக்க உளவுத் துறை மற்றும் இராணுவ தலைமையகத்துக்கும்(பென்டகன்) கடிதம் எழுதி இருந்தார்.
அதை எற்றுக் கொண்டு பின்லேடன் கொல்லப்பட்ட போது நடந்த சில நிகழ்வுகள் குறித்த தகவல்களை தந்து உதவியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சியான குடியரசு கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் கிங் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்.
பின்லேடன் கொல்லப்பட்டது குறித்த இரகசிய தகவல்களை வெளியிட்டதன் மூலம் இச்சம்பவத்தில் ஈடுபட்ட இராணுவத்தின் சீல் 6-வது பிரிவினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். பீட்டர் கிங் நாடாளுமன்ற உறுப்பினர் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்லேடன் கொலை குறித்த படத்தை தயாரிக்க உதவிய அமெரிக்க உளவுத்துறை
பதிந்தவர்:
தம்பியன்
06 January 2012
0 Responses to பின்லேடன் கொலை குறித்த படத்தை தயாரிக்க உதவிய அமெரிக்க உளவுத்துறை