Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிளிநொச்சி விசுவமடுவில் பிறந்து ஒரு நாளேயான தனது குழந்தையைக் கல்லுடன் கட்டி கிணற்றுக்குள் வீசிக் கொலைசெய்து விட்டு பெண் ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.

குறித்த பெண்ணுக்கு ஏற்கனவே 5 பிள்ளைகள் உள்ளதாகவும் அவரது கணவர் இறுதிப்போரின் போது உயிரிழந்து விட்டதாகவும்நலன்புரி நிலையத்தில் இருந்து வெளியேறி மீளக்குடியமர்ந்த இந்தப் பெண் சில மாதங்களுக்கு முன்னர் கருத்தரித்துள்ளார்.

நேற்று முன்தினம் முதல் இவரது வீட்டில் எவரும் இல்லாததால் சந்தேகப்பட்ட அயலவர்கள் அது குறித்து காவல்துறையினருக்கு தெரியப்படுத்தினர்.

இதன் பின்னர் கிளிநொச்சிப் காவல்துறையினர் அந்தப் பகுதிக்கு சென்று நடத்திய சோதனைகளின் போது குறித்த பெண்ணின் வீட்டுக் கிணற்றில் இருந்து பிறந்து ஒரு நாளான சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டது.

போர்வை ஒன்றினால் சுற்றப்பட்டு கல்லோடு சேர்த்துக் கட்டப்பட்டு குறித்த சிசுவை தாய் கிணற்றில் வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனது ஏனைய 5 பிள்ளைகளுடன் சிசுவை கிணற்றில் வீசிய பெண் தலைமறைவாகி விட்டதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.

0 Responses to விசுவமடுவில் பிறந்தசிசுவை கல்லோடு கட்டி கிணற்றில் வீசிய தாய்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com