Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திண்டுக்கல் அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட தமிழக தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் உடல் அவரது ஆதரவாளர்களால் தூத்துக்குடி நோக்கி ஊர்வலமாக எடுத் செல்லப்படுவதாகத் தெரிய வருகிறது. திண்டுக்கல் கரூர் சாலையில் உள்ள நந்தவனம்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்குச் சமீபமாக நேற்று இரவு இனந்தெரியா நபர்களினால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட பசுபதி பாண்டியனுக்கு வயது 55.

இவர் மீது கொலை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அவரது நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பழிக்குப்பழியாக இக்கொலையை மேற்கொண்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை பசுபதி பாண்டியனுக்கும் அப்பகுதியிலுள்ள பண்ணையார் குடும்பத்துக்குமிடையில் நீண்ட நாட்களாகத் தொடர்ந்து வரும் பகையும், அதன் தொடர்கொலைகளின் தொடர்ச்சியாகவும் இது நிகழ்ந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

இரு பகுதியனருக்குமிடையிலான இப் பழிவாங்கல் நடவடிக்கைகளில் பண்ணையார் குடும்பத்தில் பலர் மரணமாகியுள்ளதாகவும், அவற்றுக்கு பசுபதிபாண்டியன் காரணம் எனவும், அதே போல் பாண்டியன் தரப்பில் அவரது மனைவி ஜெசிந்தா உட்பட பதின் மூன்று பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்பொதம் ஒரு கொலை வழக்கில் பசுபதி பாண்டின் குற்றச் சாட்டப்பட்டிருந்த போதும், தேவேந்திர வேளாளர் சமூகத்தில் அவர் மரியாதைக்குரிய தலைவராகவே கருதப்படுவதாகவும் தெரிய வருகிறது. இதனால் பசுபதி பாண்டியனின் கொலையைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. இரவு நேரப் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டன. கடைகள் மூடப்பட்டன. காவல்துறையினரின் கண்காணிப்ப அதிகரிக்கப்பட்டிருந்தது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்ட போதும், பேருந்துகள் பல தாக்கப்பட்ட சம்பவங்களும், சிலர் மீது வாள் வீச்சு நடந்த சம்பவங்களும் நடத்தப்பட்டிரப்பதாகஅப் பகுதித் தகவல்கள் சில தெரிவிக்கின்றன. பசுபதி பாண்டியனின் உடல் அவரது ஆதரவாளர்களினால் தற்போது ஊர்வலமாகத் தூத்துக்குடி நோக்கி கொண்டு செல்லப்பட்டுக்கொண்டு இருப்பதாகவும், இந்த ஊர்வலத்தில் பங்கு கொள்வதற்காக திண்டுக்கல், மதுரை, அருப்புகோட்டை, எட்டையபுரம், எப்போதும் வென்றான், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து அவருக்கு ஆதரவான மக்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டிருப்பதாகவும் அறிய வருகிறது.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மதுரை விமான நிலையப் பகுதியில் வைத்து பசுபதி பாண்டியன் உடலுக்கு மலர் வலயம் வைத்து அஞ்சலி செலுத்தியதாகவும், எட்டயபுரப் பகுதியில் ஜான் பாண்டியன் அஞ்சலி செலுத்தத் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொலைச் சம்பவத்தால் இப்பகுதியில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையைத் தவிர்க்கும் பொருட்டு, காவல்துறையினரின் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

பசுபதி பாண்டியனின் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்; ஒரு சமூக அமைப்பின் தலைவர் என்கிற முறையிலும் ஒரு அரசியல் பிரமுகர் என்கிற வகையிலும் அவருக்கு காவல்துறையினர் சார்பில் உரிய பாதுகாப்பை வழங்கியிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் எந்த ஒரு தலித் தலைவருக்கும் அத்தகைய பாதுகாப்பு வழங்குவதில்லை என்கிற நிலையே உள்ளது. ஆகவேதான், இந்தப் படுகொலையும் சமூக விரோதிகளால் மிக இலகுவாக செய்யப்படுகிறது.

பசுபதி பாண்டியன் மறைவால் பெரும் துக்கத்தில் ஆளாகியுள்ள அவரது பச்சிளம் குழந்தைகள் உள்ளிட்ட உற்றார் உறவினர் யாவருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது உடலை கட்டுப்பாட்டுடன் நல்லடக்கம் செய்திட அவரது இயக்கத் தொண்டர்கள் முன்வரவேண்டும். அதுவே அவருக்கு செய்கின்ற உண்மையான அஞ்சலியாகும். சமூக விரோதிகள் திட்டமிட்டே நல்லடக்க நிகழ்ச்சியிலும் வன்முறையை தூண்ட முயற்சிப்பார்கள். அதற்கு இடம் கொடுக்காத வகையில் நல்லடக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

3 Responses to பசுபதி பாண்டியன் கொலை - தென் மாவட்டங்களில் பதற்றம் - பாதுகாப்பு அதிகரிப்பு

  1. etho oru nallavan iranthathu polla eppadi than evanga ellam peasurangala

     
  2. kumaran Says:
  3. avar than makkalukkaagavum,matta odukkap padda samookam ellavattukkaagavum poraadiyavar.

     
  4. தமிழக தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் ஈழத்தமிழர்களுக்காக நீண்ட காலம் போராடியதை எல்லோரும் வசதியாக மறந்துவிட்டார்கள் போல.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com