பிரான்ஸ் அஞ்சல் சேவையான La Poste தமிழீழ விடுதலைப்புலிகளின் 11 வித்தியாசமான படங்களை கொண்ட முத்திரைகளை வெளியிட்டதாக இலங்கையின் செய்தித்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரொஹான் ரம்புக்வெல என்பவர் பிரான்ஸில் இருந்து அனுப்பிய தகவலாக இந்த செய்தியை அது வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரது படம், தமிழீழ தேசப்படம் ஆகியன இந்த முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ளதாக செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.
La Poste 360 மற்றும் 3000 முத்திரைகளை முதலாவது இரண்டாவது பதிப்புகளாக வெளியிட்டுள்ளது.
இதன் பெறுமதி 60 சதங்களாகும். இந்த முத்திரைகள், பிரான்ஸில் 20கிராம் அஞ்சல் பொதிகளுக்கு பயன்படுத்தக்கூடியதாகும்.
இந்த முத்திரைகள்,பிரான்ஸின் அஞ்சல் சட்டங்களுக்கு அமையவே வெளியிடப்பட்டதாக பிரான்ஸின் தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.
இதேபோன்ற முத்திரைகள், சுவிட்ஸர்லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளில் கடந்த வருடமும், திருகோணமலையில் படையினரால் கொல்லப்பட்ட 5 மாணவர்களின் நினைவாக அமெரிக்காவில் இந்த வருடமும் வெளியிடப்பட்டதாக பிரான்ஸ் தமிழ் மக்கள் பேரவை குறிப்பிட்டுள்ளது.
இந்த முத்திரைகள், தமிழீழ விடுதலைப்புலிகளுடையது அல்ல, தமிழ் மக்களுடையது என்று பிரான்ஸ் தமிழ் மக்கள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் பிரான்ஸக்கான இலங்கை தூதுவர் தயான் ஜயதிலக்க, இந்த முத்திரை வெளியீடு தொடர்பில் பிரான்ஸின் அஞ்சல் திணைக்களம் மன்னிப்பு கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
0 Responses to பிரான்ஸில் தமிழ் மக்களுடைய முத்திரைகளே வெளியிடப்பட்டன