தமிழினத்தில் பிறந்த ஒரே ஒரு காரணத்தால் ஒரு 13 வயது சிறுமி சிங்கள இனவெறி அரசின் ராணுவத்தால் படு மோசமான நிலையில் ஆக்கிரமிக்கப்பட்டு அதன் விளைவில் சிக்கி தவிக்கும் அந்த சிறுமியின் கொடூர வாழ்க்கை அனைத்து ஈழத்து உறவுகளுக்கும் பொருந்தும்.
இலங்கை ராணுவத்தின் கொலை வெறி கொண்ட இறுதி யுத்தத்தில் உயிருடன் தப்பிய எம் உறவுகள் பலரின் கதை தான் புனிதவதியின் குருதி உறைந்த உண்மை சம்பவம். இது வெறும் கதை அல்ல, நியம்.
எம்மவர்களின் இவ் வரலாற்று ஆவணப் படத்தை நிச்சயமாக அனைத்து தமிழர்களும் பார்க்கவேண்டும் தற்சமயம் யேர்மனியில் அனைத்து நகரங்களிலும் திரையிடப்படும் இத் திரைக்காவியத்தை அனைத்து எம் உறவுகளும் தமது நண்பர்களுடன் இணைந்து பார்வையிட்டு எமது அனைவரின் இதயத்திலும் ஆறாப் புண்ணாக இருக்கும் அந்த வலியை மீண்டும் உணரவேண்டும்.
தமிழக மற்றும் புலம்பெயர் உறவுகளாலும் உணர்வோடு பார்வையிடப்படும் "உச்சிதனை முகர்ந்தால்" ஒவ்வொரு கணங்களும் புல்லரிக்கும் காட்சிகளையும் கட்டங்களையும் கொண்டது. அற்புதமான இந்த படைப்பை மிக உணர்வோடு உண்மையை அழிய விடமால் ஆவணமாக்கிய எம் தமிழக மற்றும் புலம்பெயர் தமிழின உணர்வாளர்கள் அனைவருக்கும் எமது உள்ளம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
"எம் பிள்ளையை மண்ணில் புதைப்பார்கள், அவள் தாய் மண்ணை அவர்கள் எங்கே புதைப்பார்கள்???"
சுதந்திரம் நோக்கி தொடர்ந்து உறுதியோடு பயணிப்போம்!
0 Responses to யேர்மன் திரையரங்கில் "உச்சிதனை முகர்ந்தால்"