Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த செம்பனார்கோவிலில் சம்பந்தம் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அருண்பிரசாத்(27) ஆசிரியராக பணியாற்றுகிறார். இங்கு காளகஸ்தினாபுரத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீதேவி அருண்பிரசாத் நடத்தி வரும் டியூசன் சென்டரிலும் படித்து வருகிறார். ஸ்ரீதேவியிடம் ஆசிரியர் முறைதவறி நடந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட ஸ்ரீதேவி, தூங்கும் போது உளறியதை அடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் பள்ளி மாணவி ஸ்ரீதேவி(பெயர் மாற்றப்பட்டு உள்ளது) இந்த பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் படிப்பதற்கு வசதியாக தற்போது ஸ்ரீதேவியின் குடும்பமும் செம்பனார்கோவில் வந்து விட்டது.

ஸ்ரீதேவி அருண்பிரசாத்திடம் டியூசனும் படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் டியூசனுக்கு சென்ற மாணவி ஸ்ரீதேவி யிடம் ஆசிரியர் அருண்பிரசாத் முறைதவறி நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் தெரியவந்தது. இதையறிந்த அருண்பிரசாத், அவரது உறவினர் மற்றும் அதிமுக பிரமுகரிடம் தஞ்சமடைந்தார். அந்த பிரமுகர் மாணவியின் பெற்றோரிடம் பணம் தருவதாக பேரம் பேசினார்.

இதையடுத்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று பள்ளி முன் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீஸ் எஸ்.ஐ. சுந்தரவடிவேல் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதற்கிடையில் பள்ளி நிர்வாகம் ஆசிரி யரை பள்ளியை விட்டு வெளியேற்றியது.இதனால் அவரது ஆதரவாளர்கள் மாணவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் ஆசிரியர் வீட்டை அடித்து உதைத்தனர்.

தகவல் அறிந்ததும் முதன்மை கல்வி அதிகாரி சந்தானம், மாவட்ட கல்வி அதிகாரி பரமசிவம் ஆகியோர் பள்ளிக்கு வந்து விசாரித்தனர். இந்த நிலை யில் நேற்று இரவு மாண வியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் செம்பனார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து ஆசிரியர் அருண்பிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கு வரும் 8ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து செம்பானர்கோவில் பகுதியில் இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

0 Responses to மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர் : மாணவர்கள் போராட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com