போர்க்குற்றவாளி ராஜபக்சேவின் உறவினர் நடேசன் குமரன், இராமேஸ்வரத்தில் உள்ள கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தபோது சில அமைப்புகளால் தாக்கப்பட்டுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
போர்க்குற்றவாளி ராஜபக்சேவின் சகோதரி கணவர் நடேசன் குமரன். இவர் இராமேஸ்வரத்தில் உள்ள கோவிலுக்கு அடிக்கடி வந்து தரிசனம் செய்வது வழக்கம். தற்போது அவருடைய வருகையை தெரிந்துகொண்ட சில அமைப்பினர், அவருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து நடேசன் குமரன் யாகம் ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது, அவரை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். நடேசன் குமரனை வெளியேற்றுமாறு சாலை மறியலிலும் அவர்கள் ஈடுபட்டனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டனர்.
போர்க்குற்றவாளி ராஜபக்சே உறவினர் மீது தாக்குதல்: இராமேஸ்வரத்தில் பரபரப்பு
பதிந்தவர்:
தம்பியன்
10 January 2012
இதைத் தான் காட்டுமிராண்டித் தனம் என்று கூறுவது!!! பாருங்கோ நீங்கள் இங்கு வச்சு அவனுக்கு அடித்தீர்கள். இலங்கையில் பதிலுக்கு சிங்களவன் தமிழனுக்கு அடிப்பான். மானக் கேட்ட பயலுவல். வெறிபிடித்து திரிகிறதுகள்.
ஈழத்தில் தமிழர்களை கொன்றதற்காக தானே இங்கு அவனை அடித்தார்கள் அதை காட்டுமிரான்டிதனம் என்று கொச்சைபடுத்தாதீர்கள் .
இந்தமாதிரியான குரங்குச்சேட்டைகளை ‘நாம் தமிழர் வானரர்கள்’ செய்வதன் மூலம் யாருக்கு தீன்மை விழையும் என்பதை வானரக் கூடங்களுக்கு புரியப்போவதில்லை. இப்படியான குரங்குச்சேட்டைகள் செய்வதைவிட சீமான் தலைமையில் வானரர் கூட்டங்கள் ராமேஸ்வர கடல் மூலம் படையெடுத்துப்போய் இலங்கையை கைப்பற்றலாமே?
அவையளின் நிறத்துக்கு கறுத்த சட்டை வேறு! இவர்கள் தான் இனவுணர்வாளர்களுங்கோ…