2013ம் ஆண்டில் மாத்திரம் உலகெங்கும் 108 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு தனது வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடமையிலிருக்கும் போது, குண்டுவீச்சு, துப்பாக்கிச் சூடு, ஏனைய ஆயுத அச்சுறுத்தல்களினால் இவர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், ஊடகவியலாளர்களுக்கு மிக ஆபத்தான வலயமாக ஆசிய பசுபிக் வலயம் இருப்பதாகவும் அந்த அறிக்கை மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.
இதில் 29% சதவீதமான படுகொலைகள், மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளில் இடம்பெற்றுள்ளன. அதோடு ஊடகவியலாளர்களுக்கு மிக ஆபத்தான நாடுகள் புதிய பட்டியலில், சிரியா முதலிடத்தை பெற்றுள்ளது. 15 ஊடகவியலாளர்கள் இங்கு கொல்லப்பட்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் பாகிஸ்தானும் (13 பேர்), பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா (10 பேர்) மூன்றாவது இடங்களையும், சோமாலியா (7 பேர்), எகிப்து (6 பேர்), என்பன அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.
எனினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் ஊடகவியலாளர்கள் கொல்லப்படும்வீதம் 10%வீதமாக குறைவடைந்துள்ளது. எனினும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை வைத்து பார்த்தால் அது இன்னமும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத உச்சத்தில் இருப்பதாகவும் ஊடகவியலாளர்களை பாதுகாக்க ஒவ்வொரு நாட்டு அரசும் கடுமையாக முயற்சிக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இதேவேளை பெண் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது. கடந்த வருடம் 6 பெண் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும், பலர் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டும் உள்ளனர்.
இதேவேளை நவம்பர் 23 எனும் திகதியை ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் தொடர்பிலான விழிப்புணர்வு தினமாக ஐநா அறிவித்துள்ளதையும் அந்த அமைப்பு வரவேற்றுள்ளது.
சர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு (IFJ) உலகின் ஊடகவியலாளர்களுக்கான மிகப்பெரிய அமைப்பாகும். 1926ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் தற்போது நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 600,000 உறுப்பினர்கள் உள்ளனர்.

0 Responses to 2013 இல் உலகெங்கும் 108 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்!