இந்தோனேசியாவின், அசே (Aceh) மாகாணத்திற்கு அருகே 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இதன் போது உயிர் சேதம் ஏற்படவில்லை என்பதுடன், முன்னர் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் 3 மணி நேரம் கழித்து வாபஸ் பெறப்பட்டது.
இன்று புதன் கிழமை அதிகாலை, கடல் மட்டத்திலிருந்து 29.1 கி.மீ ஆழத்தில் இந்நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட கூடிய பசுபிக் நெருப்பு வளையத்தில் இந்தோனேசியா இருப்பதால் இங்கு அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி இந்தோனிசாவை தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியினால் 230,000 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 Responses to இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்