Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காலநதி ஓட்டத்தில் கரைந்திட முடியாதகாவியபெரு வரலாறு கேணல் சாள்ஸ்.

எல்லைக்கு வெளியேதான்
இவனின் உறைவிடம்
அதுவே மறைவிடமும்கூட

எத்தனை எழுதினும்
எழுத்திலோ பேச்சிலோ
அடக்கிட முடியா
உன்னத மனிதன் இவன்.

கற்பனை என்றொரு
வார்ததை உண்டு தமிழில்.
அத்தனை கற்பனையும்
கடந்த வீரம் இவனது.

இவன் காற்றின் வீச்சில்
கனல் எடுக்க தெரிந்த
கந்தக வித்தை தெரிந்தவன்.

எத்தனை காலம் இவன்.
மூச்சை அடக்கி கொண்டே
பேரினவாத மூளைக்குள்.
துளையிட்டு போய் அமர்ந்திருந்தவன்.

வெளியே தெரிந்த
பேச்சுவார்த்தைகளுக்கும்
சமாதான ஒப்பந்தங்களுக்கும் பின்னால்
எங்கோ ஒரு மூலையில்
சிரித்தபடியே சாள்ஸின்
வெற்றி நின்றிருந்தது.

அண்ணையின் கண்அசைவு
ஒவ்வொன்றையும் இவனால்
முழுதாக மொழிபெயர்க்க முடிந்திருந்தது.
அதனால்தான் இவனால்
எரிமலையின் குழம்புமழையையும்
பூமிஅதிர்வின் பிரளயதையும்
வானத்தில் இருந்து
நெருப்பு மழையையும்
நிகழ்த்த முடிந்த அக்கினிகுஞ்சு இவன்.

காலநதி ஓட்டத்தில்
கரைந்திட முடியாத
காவியபெரு வரலாறு இவன்.
தலைதாழ்த்தி வணங்குகின்றோம்.

ச.ச.முத்து

கேணல் சாள்ஸ் உட்பட்ட மூன்று மாவீரர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்று.

2 Responses to காலநதி ஓட்டத்தில் கேணல் சாள்ஸ்: ச.ச.முத்து

  1. world had carlos we had charles

     
  2. TRUE .I always had the same thought

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com