Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி அஜ்மல் கசாப், கருணை மனுவைத் தள்ளுபடி செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு நடைப் பெற்ற மும்பைத் தீவிரவாத தாக்குதலில், வெளிநாட்டவர் உட்பட 166 பேர் சுட்டுக் கொல்லப்  பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு காரணமான முக்கியத் தீவிரவாதி அஜ்மல் கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்டான். மும்பை சிறையில் அடைக்கப் பட்ட அவனுக்கு மும்பை உயர்நீதி மன்றம் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

இதை அடுத்து அஜ்மல் கசாப் சார்பாக உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப் பட்டது உச்சநீதி மன்றமும் கடந்த ஆக்ஸ்ட் மாதம் அஜ்மல் கசாப்பின் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இதை அடுத்து அஜ்மல் கசாப் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினான். இந்த கருணை மனுவை பரிசீலனை செய்யக் கூடாது என்றும் உடனடியாக இந்த கருணை மனுவை நிராகரிக்கவேண்டும் என்றும், மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

0 Responses to தீவிரவாதி அஜ்மல் கசாப் கருணை மனுவை தள்ளுபடி செய்ய உள்துறை அமைச்சகம் பரிந்துரை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com