Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த 07.01.2012 அன்று நக்கீரன் அலுவலகம் அதிமுகவினரால் தாக்கப்பட்டது. அதோடு தமிழக அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து நக்கீரன் அலுவலகத்தன் மின் இணைப்பையும், குடிநீர் இணைப்பையும் துண்டித்தது. இதன் மூலம் நக்கீரன் அலுவலகம் இயங்கக் கூடாது என்று குறி வைத்து வேலை செய்தது.

இதைத்தொடர்ந்து, நக்கீரன் அலுவலகத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கி சென்னை உயர்நீதிமன்றத்தில் நக்கீரன் சார்பில் அவசர வழக்கு 09.01.2012 அன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு 10.01.2012 அன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் மற்றும் வாசுகி தலைமையிலான முதல் பென்ஞ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நக்கீரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பெருமாள், அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பான புகைப்பட ஆதாரங்களை காட்டி வாதாடியதோடு, அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எடுத்துக் கூறினார்.

இதையடுத்து தலைமை நீதிபதி இக்பால், ''அரசு என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஜாதி, மதம் பார்க்கக் கூடாது. கட்சி பேதம் பார்க்கக் கூடாது. மரண தண்டனை கைதிகளுக்கு கூட குடிநீரும், மின்சாரமும் கடைசி வரை வழங்க வேண்டும். அப்படி இருக்கும்போது நக்கீரன் அலுவலகத்தின் மின்சாரத்தையும், குடிநீர் இணைப்பையும் ஏன் நிறுத்தினீர்கள்? உங்களை யார் நிறுத்தச் சொன்னது?'' என்று அரசு தரப்பை நோக்கி கேள்வி கணைகளை தொடுத்தார்.

அப்போது குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதற்கு நக்கீரன் அலுவலகத்துக்கு அளிக்கப்பட்ட நோட்டீசின் நகல் நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டது. அதில், குடிநீரில் அசுத்தம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் துண்டித்துள்ளோம் என்று கூறப்பட்டிருந்தது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, ''எத்தனையோ இடங்களில் அசுத்தம் ஏற்பட்டுள்ளது. இதுநாள் வரை தூங்கிக் கொண்டிருந்த நீங்கள், எப்படி இந்த விஷயத்தில் மட்டும் அவசரமாக துண்டித்தீர்கள்?'' என்று கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதில் அளிக்க ஒரு நாள் அவகாசம் கேட்டது அரசு தரப்பு.

இதையடுத்து வழக்கு விசாரணையை மறுநாளுக்கு (11.01.2012) ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம்.

0 Responses to நக்கீரன் விவகாரம்: தமிழக அரசை கேள்விகளால் குடைந்த உயர்நீதிமன்றம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com