Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐ.நா மனித உரிமை பேரவையின் நான்கு உயரதிகாரிகள், சுற்றுலா பயணிகள் என்ற போர்வையில் சிறிலங்காவுக்கு மர்மமான முறையில் விஜயம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்த இந்நால்வரும், கொழும்பில் உள்ள பழமை வாய்ந்த ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும், அவர்களை சந்திப்பதற்கு, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவராலயத்தின் அதிகாரிகள் சிலர் குறித்த ஹோட்டலுக்கு வருகை தந்திருந்ததாகவும் சில நம்பகரமான தகவல்களை மேற்கோள் காட்டி சிறிலங்காவின் Tha Nation செய்தி தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமை பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முனைப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஐ.நாவின் தூதரக நெறிமுறை விதிகள் மற்றும் இராஜதந்திர நியதிகளை மீறும் வகையில் குறித்த அதிகாரிகளின் சிறிலங்கா விஜயம் அமைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள ஜெனிவா யோசனைக்கு ஆதரவு வழங்க வேண்டாம் என கோரி கொழும்பில் வெளிநாட்டு தூதரகங்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கை ஒன்று எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக சிறிலங்கா தேசத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

0 Responses to ஐ.நா மனித உரிமை பேரவை உயரதிகாரிகள், சிறிலங்காவுக்கு இரகசிய விஜயம்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com