ஜெனீவா - மனித உரிமைகளுக்கான சர்வதேச திரைப்பட விழாவில் இலங்கையின் போர்குற்றங்கள் தொடர்பிலான சனல்-4 தொலைக்காட்சியின் புதிய ஆவணப்படம் இன்று திரையிடப்படுகின்றது.
இலங்கையின் போர் குற்றங்களை ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தி சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் ஏற்கனவே இந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருந்த நிலையில் புதிய ஆவணப்படம் திரையிடப்படுகின்றது.
பெயரிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத் திரையிடலின் போது மனித உரிமைகள் தொடர்பிலான பல்வேறு சர்வதேச பிரதிநிதிகள் பங்கெடுத்துக் கொள்வதோடு ஐ.நா மனித உரிமைச் சபையினைச் சேர்ந்த பல நாடுகளில் இராஜதந்திரிகளும் பங்கெடுத்துக் கொள்கின்றனர் என அறியமுடிகின்றது.
எதிர்வரும் புதன்கிழமை சனல்-4 தொலைக்காட்சியில் இந்த புதிய ஆவணப்படம் ஒளிபரப்பாகவுள்ள நிலையில் ஜெனீவாத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றது.
போர் தவிர்ப்பு வலயத்தில் பொதுமக்கள் மீது சிறிலங்காப் படையினர் கண்மூடித்தனமாக எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதற்கு சட்டபூர்வமான, நன்கு ஆவணப்படுத்தப்பட்ட- ஐ.நா அதிகாரிகளால் ஒளிப்படங்களுடன் பதிவு செய்யப்பட்ட சம்பவம் ஒன்றும் குறித்த இந்த புதிய ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
Should England's cricket team tour Sri Lanka?
ஜெனீவாவில் இன்று திரையிடப்பட்ட சனல்-4 தொலைக்காட்சியின் புதிய ஆவணப்படம்! (காணொளி இணைப்பு)
பதிந்தவர்:
தம்பியன்
11 March 2012
0 Responses to ஜெனீவாவில் இன்று திரையிடப்பட்ட சனல்-4 தொலைக்காட்சியின் புதிய ஆவணப்படம்! (காணொளி இணைப்பு)