Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்காவின் பேரினவாத, பயங்கரவாத அரசின் மனிதகுலத்துக்கு எதிரான செயற்பாடுகள் முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறவில்லை.

நான்கு இலட்சம் மக்களை கொன்று நரபலி வேட்டையாடிவிட்டு தொடர்ச்சியாக இனப்படுகொலையை புரிந்து வருவது மட்டுமில்லாது சர்வதேச நாடுகள் எங்கும் இக் காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக ஒலித்துவரும் குரல்களையும் அடக்குவதற்கு திட்டமிட்டுச் செயற்பட்டு வருகிறது.

இதன் ஓர் கட்டமாக சுவிஸ் நாட்டில் இலங்கை தூதரகத்தின் பின்னனியோடு, நாட்டைக் காக்கும் தமிழர் கூட்டமைப்பு (இலங்கையர் பாதுகப்புப் படை) எனும் பயங்கரவாதக் கும்பல் ஒன்று தமிழ் மனிதநேயச் செயற்பாட்டாளர்களுக்கு குறிப்பாக, இளையோர்களுக்கு கொலைமிரட்டல் கடிதங்களை அனுப்பியுள்ளது.

அக்கடிதங்கள் சில காலங்களுக்கு முன் தமிழர் தாயகப் பகுதிகளில் பலருக்கு அனுப்பப்பட்டிருந்தது. தற்போது புலம்பெயர் நாடுகளிலும் பலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தம்மால் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டோருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதாகவும் ( பெயர் விபரங்களோடு) இனியும் பலருக்கு சர்வதேச ரீதியாக வழங்கப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இலங்கை அரசின் இப்பயங்கரவாத செயற்பாட்டை சுவிஸ் ஈழத்தமிழரவை வன்மையாகக் கண்டிப்பதுடன் இதற்கெதிரான செயற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது. சுவிஸ் காவற்துறையினரும் பல முறைப்பாடுகளை பெற்றுக்கொண்டதால் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இச்செயற்பாடுகள் தமிழீழ அழிவுக்கல்ல மாறாக சிறீலங்கா அரசின் முழுமையான அழிவுக்கே வழிவகுக்கும் என நாம் உறுதியாக நம்புகிறோம்.

இப்படிப்பட்ட சிறுமை விளையாட்டுகளை கண்டு தமிழ் மக்கள் பதட்டமடைய வேண்டாம் என நாம் வேண்டிக்கொள்கிறோம். அத்துடன் இப்படிப்பட்ட கடிதங்கள் கிடைக்கப் பெற்றால் காவற்துறையிடம் கையளிக்கவும். வேறு இது சார்ந்த விடையங்கள் இருப்பின் உங்கள் ஈழத்தமிழரவையுடன் தொடர்பு கொள்ளவும் (தொலைபேசி: 079 308 06 69) என சுவிஸ் ஈழத்தமிழரவை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Responses to சிறீலங்காவின் எல்லை தாண்டிய அரச பயங்கரவாதத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்: சுவிஸ் ஈழத்தமிழரவை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com