ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றிருந்தாலும் அதனை செயல்படுத்த இலங்கை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச கொக்கரித்துள்ளார்.
இது தொடர்பாக பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசியதாவது:
ஜெனீவாவில் வாக்களிப்பு முடிந்து விட்டது. இது இலங்கையில் நடக்கும் ஒரு சாதாரண தேர்தலல்ல. உலகில் மிகச் சிறிய நாடான இலங்கையை எதிர்த்து உலகிலே மிகப் பெரிய வல்லரசான அமெரிக்கா பெற்ற வாக்கு விகிதம் என்பது மிகக் குறைந்தது.
எமது நாட்டில் பலர் மது விற்பனைக்கான அனுமதியை வைத்திருந்தாலும் அவர்கள் விரும்பிய இடங்களில் மது விற்பனை கடைகளைத் திறக்க பொதுமக்கள் அனுமதிப்பதில்லை.
அதுபோல்தான் அமெரிக்கா உட்பட மேற்குலம் ஜெனீவா தீர்மானத்தை பெற்றிருக்கிறது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்த இலங்கை மக்களான நாம் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்.
அன்று ஒரு பிரபாகரனை உருவாக்கியது போல் அடுத்து ஒரு உருத்திரகுமாரனை உருவாக்கும் ஒரு திட்டம் தான் இது.
மிகச் சிறிய நாடான கியூபாவால் அமெரிக்காவை எதிர்த்து வாழ முடியுமாயின் ஏன் எம்மால் முடியாது? என்றார் அவர்.
0 Responses to அமெரிக்க தீர்மானத்தை செயற்படுத்த ஒருபோதும் அனுமதியோம்! வீரவன்ச