Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் இலங்கைப் பயணம் ரத்துச் செய்யப்படலாம் அல்லது பின் தள்ளிப் போகலாம் எனவும் புதுடில்லி இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் அமெரிக்கா இலங்கை மீது கொண்டுவந்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ளமையே இந்த நெருக்கடி நிலைக்குக் காரணம் என்று தெரியவருகிறது.

இந்தியாவின் இந்த முடிவால் கொழும்பு கடும் ஆத்திரம் அடைந்துள்ளதாகப் புதுடில்லிக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இதனால் இந்தப் பயணம் இப்போதைக்கு உகந்தது அல்ல என இந்திய மத்திய அரசின் ஆலோசகர்கள் பிரதமர் மன்மோகன் சிங்குக்குச் சுட்டிக்காட்டியுள்ளதாகவும், இந்தியா மீதான கோபம் தணிந்த பின்னர் இது பற்றிச் சிந்திக்கலாம் எனக் கூறியுள்ளதாகவும் நம்பகரமாக அறியமுடிந்தது.

இந்தப் பயணம் சாத்தியப்படுமா அல்லது பிற்போடப்படுமா என்பது குறித்துத் தற்போதைக்கு எம்மால் கூற முடியாது என காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவருமாகிய பீ.எஸ்.ஞானதேசிகன் தெரிவித்தார்.

இலங்கை அரசுடன் இந்தியா தொடர்ந்தும் உறவு வைத்துள்ளதா என வெளிவிவகார அமைச்சு அறிவிக்கும் எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக்த்தின் மீது இலங்கை அரசியல்வாதிகள், அரச ஊடகங்கள் கோபத்துடன் இருப்பதாகவும் இந்தியப் பிரஜைகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கைப் பயணம் குறித்து அவர் குறிப்பிடுகையில், பாரதீய ஜனதா கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ், இலங்கை செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவைப் பெயரிட்டுள்ளதாகவும் வசதிப்படி இலங்கைப் பயணத் திகதியை அவரால் நிர்ணயிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

0 Responses to இந்திய உயர்மட்டக் குழு இலங்கைப் பயணம் ரத்து!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com