Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எகிப்தின் எல்லை நகரமான றஃபாஹ் இற்கு அண்மையில் உள்ள கிராமம் ஒன்றுக்கு போலிசார்களை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த இரண்டு பஸ் வண்டிகளை இடைமறித்து ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 25 போலிசார் கொல்லப் பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் ஆர்ப்பாட்டக் காரர்களால் தடுத்து வைக்கப் பட்டிருந்த சிறை அதிகாரியை விடுவிக்கும் பொருட்டு போலிசார் பிரயோகித்த கண்ணீர்ப் புகைக் குண்டினால் 36 பேர் கொல்லப் பட்டிருந்தனர். இதற்குப் பழி வாங்கும் முகமாக இத்தாக்குதல் மேற்கொள்ளப் பட்டிருக்கலாம் எனக் கருதப் படுகின்றது.

இத்தாக்குதல்களுடன் சேர்த்து எகிப்துக் கலவரங்களில் புதன்கிழமையிலிருந்து இன்று வரை 1000 பேர் கொல்லப் பட்டிருப்பனர். இதனை அடுத்து அங்கு தற்காலிகமாகச் செயற்பட்டு வரும் இராணுவ அரசுக்கு ஐ.நா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இன்று சினாயில் நடைபெற்ற தாக்குதலில் குறித்த பஸ் வண்டிகளை மறித்து நிறுத்தி சாதாரண உடையில் இருந்த போலிசாரை இறங்க வைத்து மண்டியிடச் செய்த போராளிகள் அதன் பின்னர் அவர்களைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.

0 Responses to எகிப்தின் வடக்கு சினாய் பகுதியில் நிகழ்ந்த தாக்குதலில் 25 போலிஸார் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com