Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தன்னை சந்திக்கும் தலைவர்களிடம் ஏற்கெனவே பாடமாக்கிய வரிகளை ஒப்பிவித்து வருகிறார். வெறுமனே நாடுகளுடைய பெயர்களை மாற்றிவிட்டு பேசியதையே திரும்பவும் பேசி வருகிறார் என்று டென்மார்க் தொலைக்காட்சி கேலி செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி தற்போது அமெரிக்காவில் பெரும் பரபரப்பாக பாக்கப்படுகிறது.

பராக் ஒபாமாவுக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொள்ளும் றிப்பப்ளிக்கன் கட்சி வேட்பாளர் சாரா பெலின் தனது பிரத்தியேக ரிவிற்றர் இணையப்பக்கத்தில் இதை மொழி பெயர்ப்பு செய்து போட்டுள்ளார். இதை நல்ல உதாரணமாகக் காண்பித்து, டெமக்கிரட் கட்சியினரின் ஆளுமைக்குறைவை அமெரிக்க மக்களிடையே அம்பலப்படுத்தி வருகிறார். இது குறித்த கருத்துரைத்த டேனிஸ் ஆய்வாளர்கள் இது ஒரு சாதாரண நிகழ்ச்சியாக இருந்தாலும், ஒபாமாவுக்கு பலத்த அடியாகவே இருக்கும் என்றும் தெரிவித்தார்கள்.

ஒபாமா என்பவர் பதவியில் இருப்பதற்கு ஏற்ப பாடமாக்கிய வசனங்களை பேசும் கிளிப்பிள்ளை என்ற குற்றச்சாட்டு இதனால் மேலும் ஊர்ஜிதமாகியுள்ளது. இந்த ஒளிப்பதிவு வரும் நவம்பர் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் பலத்த பாதிப்பை ஒபாமாவுக்கு ஏற்படுத்துமென எதிர் பார்க்கப்படுகிறது.

இது இவ்விதமிருக்க தற்போது தென் கொரிய தலைநகர் சியோலில் நடைபெறும் அணு ஆயுதமும் உலகப் பயங்கரவாதமும் மாநாட்டில் ஒபாமா கலந்துள்ளார். இங்கும் இவர் தனக்கு பக்கத்தில் ஒலி வாங்கி இயங்கிக் கொண்டிருப்பது தெரியாமல் புலம்பியிருக்கிறார். தனக்கு அருகில் இருந்த, பதவி விலகிப்போகவுள்ள ரஸ்ய அதிபர் டிமிற்ஜி மிடேவிடம் பேசிய அவர்: பதவி போய்விட்ட பின்னர் மிகவும் இயல்பாகவும், தளர்வாகவும் பேசுவதை என்னால் அவதானிக்க முடிகிறது என்று கூறினார். அதைக் கேட்ட ரஸ்ய அதிபர் டிமிற்ஜி மிடேவ் இந்த விடயத்தை நான் மறந்துவிடாமல் புதிதாக வரவிருக்கும் அதிபர் புற்றினிடம் தெரிவிக்கிறேன் என்று கூறினார். இப்படி இருவரும் கதைத்ததை வெளியில் இருந்தவர்கள் தெளிவாகக் கேட்டுள்ளார்கள். இப்போது முகத்தை இறுகப் போட்டுக்கொண்டு அலையும் புற்றினுடைய முகத்தில் சிறிய தளர்வை இது ஏற்படுத்த உதவலாம்.

மேலும் தற்போது சியோலில் நடக்கும் அணு ஆயுத பயங்கரவாத மாநாடு ஒரு வெத்துவேட்டு மாநாடு என்று டேனிஸ் ஆய்வாளர்கள் நேற்றே தெரிவித்துவிட்டார்கள். நேற்று பேசிய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் அணு பயங்கரவாதத்தைத் தடுக்க பரந்துபட்ட ஒத்துழைப்பு தேவை காடு, மலை என்று புலம்பியிருந்தார். அணு ஆயுதத்தை பயங்கரவாதிதான் வைத்திருக்க வேண்டும் என்பதல்ல, அதை இப்போது யார் அணு குண்டை வைத்திருக்கிறார்களோ அவர்களைப் பார்த்தே உலகம் நடுங்குகிறது என்ற கோணத்தில் பேச நாதியில்லாமல் கிடந்தது சியோஸ் மாநாடு. ஜப்பானில் அமெரிக்கா வெடித்த அணு குண்டு பயங்கரவாதத்தை இன்றைய பயங்கரவாதிகளால் செய்ய முடியாது என்பது சிறு பிள்ளையும் அறியும் உண்மையாகும். சியோல் மாநாடு சீலம்பாய் மாநாடாக போயுள்ளது.

இது இவ்விதம் நடைபெற நேட்டோ செயலர் ஆனஸ்போ ராஸ்முசன் எதிர் வரும் மே 20 – 21 ஆகிய இரு தினங்களிலும் சியோலில் நடப்பது போல அமெரிக்காவில் உள்ள சிக்காகோவில் நேட்டோவின் உச்சி மாநாடு நடக்கும் என்று அறிவித்துள்ளார். ஈரான் – வடகொரியா ஆகிய இரண்டு நாடுகளும் தயாரிக்கும் அணு குண்டால் ஐரோப்பாவிற்கு ஆபத்து வராமல் தடுக்கும் நேட்டோவின் ஏவுகணை மையம் அமைப்பது தொடர்பாக இதில் பேசப்படும் என்றும் கூறினார். ஒபாமா மீது விமர்சனங்கள் இருப்பது போல இவர் பேசும் ஆங்கிலமும் பத்தாம் வகுப்பு பிள்ளைகள் பேசும் ஆங்கிலம் போல இருப்பதாக பலர் கேலி செய்து வருகிறார்கள். இவரோடு ஒப்பிட்டால் ஆங்கிலேயர் ஒருவரை மணம் முடித்த தற்போதய டேனிஸ் பிரதமர் கெல தொனிங் சிமித் நன்றாக ஆங்கிலம் பேசுவதாக சோசல் டெமக்கிரட்டி ஆதரவாளர் புலம்பி வருகிறார்கள். பாடமாக்கி பேசும் பராக் ஒபாமாவுடன் பேச ஆங்கில அறிவு எதற்கு என்ற கேள்வி இப்போது டென்மார்க்கில் பரவலாக பேசப்படுகிறது.

இப்படி தலைவர்களுடைய வேடிக்கை ஒரு புறம் போய்க் கொண்டிருக்க தற்போது டென்மார்க் வந்திருக்கும் பிரிட்டன் முடிக்குரிய இளவரசர் சாள்ஸ் – கெமிலா தம்பதியர் தங்கியிருக்கும் அமேலியன் போ அரண்மனையில் புகை பரவும் அலாரம் திடீரென அலறியது. பதறியடித்து ஓடிப்போன தீயணைப்புப் படையினர் வெறுமனே புகை அலாரம் அடித்ததாகவும் அரச தம்பதியருக்கு யாதொரு ஆபத்தும் இல்லை என்றும் தெரிவித்தனர். அரண்மனையின் அந்தத்தில் கிடந்த பாழாய்ப் போன புகை அலாரம் இந்த நேரம் பார்த்து அடித்து குடலை கலக்கிவிட்ட பதட்டத்துடன் தீயணைப்புப் படை திரும்பிப் போயுள்ளது..

0 Responses to ஒபாமாவை வறுத்தெடுக்கிறார் சாரா பெலின்...

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com