சிறிலங்காவுக்கான ஐ.நா. நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹன்னவிற்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவுஸ்திரேலியாவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள கோஹன்ன, சிறிலங்காப் படையினரால் தமிழர் பகுதியில் மேற்கொண்ட போரின்போது, போர்க்குற்றம் புரிந்தமைக்கான ஆதாரங்களை அவுஸ்திரேலிய தமிழ் அமைப்பு ஒன்று அவுஸ்திரேலிய காவற்றுறையினரிடம் சமர்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
“இலங்கையின் இறுதிக் கட்ட போரின்போது இடம்பெற்ற ஒரு கூட்டுக் குற்றவியல் சம்பவம் தொடர்பில் பாலித கொஹண மீது விசாரணை நடத்தவும்” என்ற தலைப்பில் 32 பக்கங்கள் அடங்கிய போர்க்குற்ற ஆணவங்களை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சின் ஊடாக அவுஸ்திரேலிய தமிழ் அமைப்பு சமர்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆவணத்தில் உள்ள விடயங்களை மூன்று முக்கிய அம்சங்களில் ஆராயும் அவுஸ்திரேலிய காவற்றுறையினர், இது குறித்து விசாரணை நடத்துவதா இல்லையா என்பதை பின்னர் தீர்மானிப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Responses to பாலித கோஹன்னவிற்கு எதிராக போர்க்குற்ற விசாரணை