ஆப்கான் தலைநகர் காபூலில் திடீரென நுழைந்த தலபான்கள் தற்கொலைத் தாக்குதல்களை நடாத்தியுள்ளார்கள். முதலாவதாக தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தலைநகரில் உள்ள கோட்டல் ஒன்றிற்குள் நுழைந்து, அங்கிருந்தபடியே சரமாரியான தாக்குதல்களை நடாத்தினார். இந்த கோட்டல் ஈரானிய தூதராலயத்திற்கும், அதிபர் மாளிகைக்கும் அருகில் உள்ளது. இவர் அங்கு சென்றதும் பெரும் புகை மூட்டம் கோட்டலில் இருந்து கிளம்பியது. அடுத்து ரஸ்ய தூதரலயம் கிரனைட் தாக்குதலுக்கு இலக்கானது. மறுபுறம் ஜலலாபாத்தில் இருந்த விமான நிலையம் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானது. இவருடைய தாக்குதல்களில் ராக்கட் தாக்குதல்கள் முக்கியம் பெற்றது.
காபூலில் உள்ள வெளிநாட்டு தூதராலயங்கள், பாராளுமன்றம் என்பன பல்வேறு தாக்குதல்களுக்குள் சிக்குண்டுள்ளன. முதலாவதாக ஜேர்மனிய, பிரிட்டன் தூதராலயங்கள் மீது பெருமளவு மோட்டார் தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. ஜேர்மனிய தூதராலயம் சேதமடைந்துள்ளதாக சற்றுமுன் ஜேர்மனி தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதராலயத்தை நோக்கி தாக்குதல்கள் தொடர்ந்தவண்ணமுள்ளன. அதுபோல பாராளுமன்றத்திற்குள் பல குழுக்களின் தாக்கதல் நடாத்தியுள்ளன. அனைத்தையும் தாமே நடாத்திக் கொண்டிருப்பதாக தலபான்கள் தெரிவித்தார்கள்.
டேனிஸ் தூதராலயம் தாக்குதலில் தப்பியுள்ளது. அனைத்து பணியாளரும் கட்டிடத்தில் மறைந்துள்ளனர். டென்மார்க் தூதராலயத்திற்கு ஒரு கி.மீ தொலைவில் தாக்குதல் நடந்துள்ளது. பூரணமான சேத விபரங்கள் இன்னமும் கிடைக்கவில்லை. மொத்தத்தில் காபூல் நகரமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வரும் 2014ல் நேட்டோ படைகள் ஆப்கானை விட்டு வெளியேறும் என்ற பேச்சுக்கள் நடைபெறும்வேளையில் தலபான்கள் இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளமை பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது.
அலைகள்
0 Responses to தலபான்கள் அதிரடித் தாக்குதல் காபுல் நகரமே அல்லோகல்லோலம்