Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திமுக முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ் ராமச்சந்திரனை விருதுநகர் அருகே ஆவல்சூரம்பட்டிவிலக்கில் போலீசார் கைது செய்தனர்.

கொலை வழக்கு ஒன்றில் கைதான திமுக பிரமுகரான சாகுல் ஹமீதை, விடுவிக்க முன்னாள் திமுக அமைச்சர் கேகேஎஸ்எஸ் ராமச்சந்திரன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்று அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கேகேஎஸ்எஸ். ராமச்சந்திரன் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் கேகேஎஸ்எஸ்ஆரை கைது செய்வதற்காக, அவரது மகன் ரமேஷை விருதுநகர் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ரமேஷ் மற்றும் திமுக ஒன்றிய தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணனிடமும், கேகேஎஸ்எஸ்ஆர் தங்கியுள்ள இடம், அவரது சேல்போன் நம்பரை கேட்டு போலீசார் விசாரணை நடத்தினர்..

இந்த நிலையில் மகன் ரமேஷை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றது கேகேஎஸ்எஸ்ஆருக்கு தெரியவந்தது. இதையடுத்து மதுரைக்கு விமானத்தில் அவர் வருவதாகவும், விமான நிலையத்திலேயே போலீசார் அவரை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

போலீசார் மதுரை விமான நிலையத்தில் குவிக்கப்பட்டனர். பத்திரிகையாளர்களும் அங்கு குவிந்தனர்.

மதுரை விமான நிலையத்திற்கு வந்த கேகேஎஸ்எஸ்ஆர், அங்கிருந்து கிளம்பினார். அப்போது அவரது காரை போலீசார் பின்தொடர்ந்தனர்.

சாத்தூர் கோர்ட்டில் கேகேஎஸ்எஸ்ஆர் சரண் அடைவார் என்று தகவல் பரவியதையடுத்து அங்கு ஏராளமான பத்திரிகையாளர்களும், திமுகவினரும் குவிந்தனர். இதபோல் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட அவரது மகன் சூலக்கரை ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளார். ஆகையால் அவர் சூளக்கரைக்கு செல்லக்கூடும் என்றும் அங்கும் பத்திரிகையாளர்களும், திமுகவினரும் குவிந்தனர்.

இந்நிலையில் கேகேஎஸ்எஸ் ராமச்சந்திரனை விருதுநகர் அருகே ஆவல்சூரம்பட்டிவிலக்கில் போலீசார் கைது செய்தனர். கட்சிக்காரர்களுடன் வந்த அவரை, காரைவிட்டு இறக்கி ஜீப்பில் ஏற்றியது போலீஸ்.

ஒளி, சி.என்.ராமச்சந்திரன்

0 Responses to திமுக முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் கைது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com