திருச்சியில் நடந்த காங்கிரஸ் முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசியபோது, ‘’எதற்காக இவ்வளவு கூட்டம்? ஏன் இந்த கூட்டம்? நாம் எந்த இலக்கு, எந்த லட்சியத்தை நோக்கிச் செல்கிறோம்? என்ற கேள்வி, அனைத்து தொண்டர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
2016ம் ஆண்டு யார், எங்கே, எப்படி இருக்க வேண்டும்? என்பது, நமது மனதில் எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.சொல்ல வேண்டிய இடத்தில், மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன் உள்ளனர்.
என் தலைவர் ராஜிவ் கூறியது போல, தி.மு.க., - அ.தி.மு.க., இருவரும், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். யாரிடம் வேண்டுமானாலும் கூட்டணி வையுங்கள்; எங்களை அடமானம் வைத்து விடாதீர்கள். சுதந்திரமாக செயல்பட விடுங்கள்.
நாம் சுயமரியாதையோடு, இரு கட்சிகள் செய்த தவறுகளை தட்டிக்கேட்டு, மக்கள் பிரச்னைகளை முன் வைத்துப் போராடினால் தான், நாம் மரியாதையாக இருக்க முடியும்.கூடங்குளம் ஆறு மாதம் செயல்படாததால்,
பொருளாதார நஷ்டம் ஏற்பட்டது மட்டுமல்லாமல், மாணவர்களின் படிப்பு வீணானது.
ஏற்கனவே, சமச்சீர் கல்வி அமல்படுத்துகிறேன் என்ற பெயரில், நான்கு மாதம் படிப்பு வீணானது. மின்வெட்டால் மூன்று மாத காலம் மாணவர் படிப்பு வீணாகியிருக்கிறது.
இதை, சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்தியாவின் எதிர்காலமே இளைஞர்கள் தான். ஓராண்டு படிப்பு வீணானதால், நாட்டின் வளர்ச்சி ஓராண்டு பின் தங்கிவிடும். எனவே, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்2, எழுதிய மாணவர்களுக்கு, பத்திலிருந்து 20 மதிப்பெண்கள் அதிகமாக வழங்க வேண்டும் என, தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறினார்.
அவர் மேலும், ‘’வைகோ, சீமான் போன்றவர்கள், காகிதப் புலிகள் என்பது, சிங்களவனுக்கு தெரியும். கள்ளத் தோணியில் சென்றாலும், அவர்களை சிங்களவன் அடிக்க மாட்டான். காங்கிரஸ் கட்சி நம்மை அழித்து ஒழித்துவிடும்; எதையும் சாதிக்கிற ஆற்றல் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது என்பதால் தான் தாக்கினான்’’என்று கூறினார்.
வைகோவும், சீமானும் காகிதப் புலிகள்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு
பதிந்தவர்:
ஈழப்பிரியா
09 April 2012
வை.கோவும் , சீமானும் காகிதப் புலிகளாய் இருந்து கொண்டே காங்கிரஸ் கட்சியை
தகர்த்து நொறுக்கி படுக்கையில் போட்டிருக்கிறார்கள் என்பதற்கு நடந்து முடிந்த
சட்டசபைத் தேர்தல் சாட்சி , அவர்கள் நிஜமாகவே புலியாக அவதாரம் எடுத்தால்
காங்கிரஸ் என்ற தமிழின விரோத இயக்கம் தமிழ் நாட்டில் இருந்ததற்கான சுவடே
இல்லாமல் போகும் என்பதை காமடிப் பீசான இளங்கோவன் புரிந்து கொள்ள வேண்டும்.