ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்தது.
அன்றிலிருந்து இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலில் சிங்கள வெறியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மட்டக் களப்பில் மகாத்மா காந்தி சிலை மற்றும் தமிழறிஞர்களின் சிலைகளை அடித்து உடைத்தனர்.
தற்போது இந்துக்களின் கோவில்களில் புகுந்து சிலைகளை சேதப்படுத்தியுள்ளனர். தமிழர்களின் யாழ்ப்பாணம் பகுதியில் இந்து கோவில்கள் உள்ளன.
அங்குள்ள கோப்பாய், பிரான் பற்று பிரதேசத்தில் உள்ள விநாயகர் கோவிலில் புகுந்த சிங்கள வெறியர்கள் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்குள் புகுந்தனர். பின்னர் அங்கிருந்த 2 சுவாமி வாகனங்களின் தலையை அறுத்து சென்றனர்.
அதே போன்று அச்செழு பகுதியிலும் கோவில் ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சாமி வாகனங்களின் தலைகளை அறுத்து சென்றனர். இச்சம்பவங்கள் பட்டப் பகலில் நடந்தன.
இது குறித்து புகார் செய்தும் இதில் சம்பந் தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட வில்லை. மேலும் வழக்கு பதிவு செய்து வழக்கு தொடரவும் இல்லை.
வெறிபிடித்த சிங்களர்கள் - யாழ்ப்பாணத்தில் இந்து கோவில்களில் புகுந்து தாக்குதல்!
பதிந்தவர்:
ஈழப்பிரியா
09 April 2012
0 Responses to வெறிபிடித்த சிங்களர்கள் - யாழ்ப்பாணத்தில் இந்து கோவில்களில் புகுந்து தாக்குதல்!