அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கு மூன்றாம் தரப்பின் தலையீடு தேவையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தீர்வுத்திட்டமொன்றை முன்வைப்பது தொடர்பில் அரசாங்கத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு மூன்றாம் தரப்பின் ஒத்துழைப்பு அவசியமற்றது.
கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியானது மூன்றாம் தரப்பு அவசியமற்றது என்ற உத்தியோகபூர்வ நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.
பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் எமது கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் பேச்சுவார்த்தைகளை தொடர்வதில் தடையில்லை.
பேச்சுவார்த்தைகளை தொடர்வது குறித்து அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பேச்சுவார்த்தைகளின் போது மூன்றாம் தரப்பின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட வேண்டியது அவசியமானது என்றும், ஐக்கிய நாடுகள் அமைப்பு, சார்க் பிராந்திய வலய அமைப்பு அல்லது வேறும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தரப்பின் மத்தியஸ்தத்துடன் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை தொடர முடியும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கு மூன்றாம் தரப்பு தேவையில்லை!: சம்பந்தன்
பதிந்தவர்:
தம்பியன்
08 April 2012
0 Responses to அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கு மூன்றாம் தரப்பு தேவையில்லை!: சம்பந்தன்