கிழக்கு மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கும் இலங்கை அரசு, சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அரசின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லீம்களின் விருப்பத்திற்குரிய ஒருவராக ஹக்கீம் இருப்பதால், கிழக்கு மாகாணத்தை அரசு கைப்பற்றுவதற்கு இது சரியான நகர்வாக அமையும் என ஜனாதிபதியிடம் சில அமைச்சர்கள் ஹக்கீமை பரிந்துரை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் அடுத்த வருடம் மே மாதம் முடிவடையவுள்ளது. இந்நிலையில் கிழக்கு மாகாணசபையை உடனடியாக கலைத்துவிட்டு தேர்தலொன்றுக்கு செல்வதற்கு ஜனாதிபதி முடிவெடுத்திருப்பதாகவும், மாகாண சபை கலைக்கப்பட்ட பின்னர் தேர்தல் நடத்துவது தொடர்பில் கிழக்கின் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடனும் அவர் முக்கிய பேச்சுக்களை நடத்தவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை நாட்டின் அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு வடக்கு மாகாண சபை தேர்தலை இப்போதைக்கு நடத்துவதில்லை என அரசு முடிவெடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணசபை தேர்தல் : அரசின் முதலமைச்சர் வேட்பாளராக ஹக்கீம்?
பதிந்தவர்:
ஈழப்பிரியா
09 April 2012
0 Responses to கிழக்கு மாகாணசபை தேர்தல் : அரசின் முதலமைச்சர் வேட்பாளராக ஹக்கீம்?