Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பில் சட்டசபையில் இன்று அவர் விடுத்த அறிவிப்பில்:

01.01.2012 முதல் மத்திய அரசு அலுவலர்களுக்கான அகவிலைப் படியை, ஆசிரியகள், அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் 7 சதவீதம் மத்திய அரசு உயர்த்தியது போல், தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கும் 1.1.2012 முதல் அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 1.1.2012 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும்.

இந்த அகவிலைப்படி உயர்வு, உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள்; ஆசிரியர்கள்; வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள்; அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள்; ஊராட்சி உதவியாளர்; எழுத்தர்; மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும். இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் என சுமார் 18 லட்சம் பேர் பயனடைவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1,383.49 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைவிகிறேன் என கூறியுள்ளார்.

0 Responses to ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு 7% வீத அகவிலைப்படி உயர்வு : தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com