சிறிலங்காவுக்கான இந்தியக் குழுவில் இருந்து தி.மு.கவும் விலகுவதாக சற்று முன்னர் மு.கருணாநிதி அறிவித்திருப்பதானது தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வியூக அரசியலுக்குள் வீழ்ந்து விட்டதாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயணத் திட்டம் முற்றிலும் சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சந்தித்துப் பேச வாய்ப்புகள் இல்லை என்றும், சிறிலங்கா அரசின் விருந்துகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளதோடு அககுழுவில் இருந்து தனது கட்சி உறுப்பினரை விலக்கிவிட்டார்.
இந்நிலையில் 16-04-2012 திங்கட்கிழமை அன்று இந்தியக்குழுவினர் சிறிலங்காவுக்கு செல்லவுள்ள நிலையில் மு.கருணாநிதியின் அறிவிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரத்தில் தமிழக முதலமைச் செல்வி ஜெயலிதாவின் அதிரடி அரசியல் வியூகதத்தின் தொடர்சியாக இந்தியக்குழுவினரின் சிறிலங்காவுக்கான பயணத்தினை மையப்படுத்தி செல்வி ஜெயலலிதா வகுத்த அரசியல் வியூகத்துக்குள் ஒரு கல்லில் மூன்று மாங்காய்கள் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
தனது கட்சிப் பிரதிநிதியை பயணக்குழுவில் இடம்பெறவேண்டாமென நிறுத்தியதால் இந்தியத் தூதுக்குழுவின் பயண நோக்கத்திற்கு எந்தவிதமான தாக்கமும் ஏற்படப்போவதில்லை என்றாலும் இந்திய மத்திய அரசுக்கும் தனது பரம அரசியல் எதிரியான தி.மு.க.வுக்கும் இலங்கைக்கும் அரசியல் ரீதியாக அவர் தாக்குதல் நடத்தியுள்ளார் என்று பெஸ்ட் போஸ்ட் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
ஜெயலலிதா வியூக அரசியல் நகர்வானது ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினை விவகாரத்தில் அவர் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கான நோக்கத்தைக் கொண்டிருப்பதோடு ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக அரசியல் களத்தில் மட்டுமல்ல இந்திய மத்திய அரசியல் களத்திலும் தன்னுடைய வியூகத்துக்குள் இரு களங்களையும் வீழ்த்துகின்ற வல்லமையை வெளிப்படுத்தி நிற்கின்றார்.
சிறிலங்கா அரசுடன் நட்புறவுடன் காட்சியளிப்பதற்குப் பதிலாக கடுமையான முறையில் செயற்படவேண்டுமென்பதே ஜெயலலிதாவின் நிலைப்பாடகவுள்ளது.
ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரத்தில் முதலில் களத்தில் குதித்த செல்வி ஜெயலிலதா மத்திய அரசுக்கு மட்டுமல்ல திமுகவுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தினார்.
அதில் வெற்றியும் கண்டாhர். தற்போது இந்தியக்குழுவின் சிறிலங்காவுக்கான பயண விவகாரத்திலும் அதிரடி அரசியலை வெளிப்படுத்திய ஜெயலிலதாவின் வியூகத்துக்குள் தற்போது திமுகவும் வீழ்ந்து விட்டது என்தற்கான சாட்சியாகவே தற்போது மு.கருணாநிதியின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இந்திய மத்திய அரசியலை மையப்படுத்தி நகரும் செல்வி ஜெயலலிதாவின் அரசியல் வியூகங்கள் தமிழக எல்லையினையும் தாண்டிய அரசியல் சாணக்கியத்தைக் கொண்டிருப்பதாக அரசியல் அவதானிகளின் கருத்தாகவுள்ளது.
அகரதன்
0 Responses to முதல்வரின் வியூக அரசியலுக்குள் வீழும் மாங்காய்கள்! (காணொளி இணைப்பு)