பிரபல மலையாள நடிகர் கிஷோர் வீரப்பனாகவும், அவரைச் அதிரடிப் படை மூலம் சுட்டுக்கொண்ட விஜயகுமார் ஐபிஸாக அர்ஜூனும் நடித்துள்ள படம் 'வனயுத்தம்.’
இந்தபடத்தை குப்பி, காவலர் குடியிருப்பு படங்களின் மூலம் உண்மைச் சம்பவங்களை படமாக்கிய ஏ.எம்.ஆர் ரமேஷ் இயக்கியிருகிறார். உண்மையில் இந்தப் படத்துக்கு வீரப்பனின் மனைவி முத்துலட்சுமிதான் தடை வாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நக்கீரன் வார இதழின் ஆசிரியர் கோபால் தடைவாங்கியிருப்பது கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வனயுத்தம் படத்தின் கன்னடப் பதிப்பான ‘அட்டகாசத்துக்கும்’ தடைகோரிப்பெற்றிருகிறார் கோபால்! முன்னதாக சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் தாக்கல் செய்த மனுவில், "பல ஆண்டுகளாக வீரப்பனை பற்றி தவறான தகவல்கள் வெளியிடப்பட்டு வந்தன. அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, நிருபருடன் காட்டுக்குள் சென்று வீரப்பனைப் பற்றிய உண்மைத் தகவல்களை மக்களுக்கு கொடுத்தோம்.
வீரப்பன் வாழ்கையைச் சித்தரிக்கும் படத்துக்கு தடை வாங்கினார் நக்கீரன் கோபால்!
பதிந்தவர்:
தம்பியன்
15 April 2012
0 Responses to வீரப்பன் வாழ்கையைச் சித்தரிக்கும் படத்துக்கு தடை வாங்கினார் நக்கீரன் கோபால்!