அமெரிக்காவுக்கு வருகை தருமாறு இலங்கை தமிழ் எம்.பிக்களுக்கு ஹிலாரி கிளிண்டன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அலற வைத்துள்ளது.
ஐநா சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை வெளிவிவகாரத்துறை மந்திரி ஜி.எல்.பெரிசை அமெரிக்காவுக்கு வருமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை ஏற்று ஜி.எல்.பெரிஸ் மே மாதம் 2வது வாரத்தில் அமெரிக்காவுக்கு செல்லவிருக்கிறார். இதற் கிடையில் தமிழ் தேசிய கூட்டமைப்பைப்பைசேர்ந்த தமிழ் எம்.பிக்கள் அமெரிக்காவுக்கு வருகை புரிய வேண்டும் என்று ஹிலாரி கிளிண்டன் அழைப்பு விடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த அழைப்பு இலங்கை அதிபர் ராஜபச்சேவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது.
இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன? அதன் முன்னேற்றம் என்ன? அரசியல் தீர்வு விஷயத்தில் எதிர்கால நகர்வுகள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆராய்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்பிக்களை ஹிலாரி கிளிண்டன் அழைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் ராஜபக்சே, ‘’ நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை எங்களால் உருவாக்கப்பட்டது. அந்த அறிக்கையை பறித்துக்கொண்டு இதில் எங்களுக்கே அழுத்தம் கொடுக்கப்பார்க்கிறார்கள். அரசியல் தேவைகளூக்காக சிலர் நாட்டையே காட்டிக்கொடுக்க முயற்சிக்கின்றனார்’’ என்று அலறுகிறார்.
0 Responses to அழைக்கிறது அமெரிக்கா - அலறுகிறார் ராஜபக்சே