கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபி குடும்பத்திற்கு சொந்தமான நிலம் மற்றும் ஹோட்டல் காம்பிளக்ஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.132 கோடி ஆகும்.
கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் குடும்பத்தாருக்கு இத்தாலியில் ஏகப்பட்ட சொத்துக்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கடாபியின் குடும்பத்தாருக்கு சொந்தமான ரூ.7,600 கோடி மதிப்புள்ள சொத்துக்களை இத்தாலி நாட்டு வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பான்டெலிரியாவில் உள்ள கடாபியின் ஹோட்டல் காம்பிளக்ஸ் மற்றும் நிலத்தை பறிமுதல் செய்யுமாறு ரோம் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில ரூ.132 கோடி மதிப்புள்ள ஹோட்டல் காம்பிளக்ஸ் மற்றும் நிலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பான்டெலிரியாவில் ஹாலிடே வில்லேஜ் கட்ட கடாபி திட்டமிட்டிருந்தார் என்று கூறப்பட்டது.
இத்தாலியின் மிகப்பெரிய வங்கியான யுனிகிரெடிட்டில் இருந்த 1.3 சதவீத பங்கு, எண்ணெய் நிறுவனமான எனியில் இருந்த 0.6 சதவீத பங்குகள், கடாபியின் மகன் சாதி கடாபிக்கு சொந்தமான ஜுவென்டஸ் என்று கால்பந்து கிளப்பும் கடந்த மார்ச் மாதம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் அடக்கம்.
ஹேகில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் வேண்டுகோளை ஏற்று கடாபியின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
0 Responses to கடாபியின் ரூ.132 கோடி ஹோட்டல் பறிமுதல்