வடகொரியா போலி ஏவுகணை ஒன்றை பறக்கவிட்டு, அது கடலில் விழுந்தது பழைய கதையாகிவிட்டது.
உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தற்போது பல புதிய அணு குண்டு காவிய ஏவுகணைகளை அது பறக்கவிட்டு பாPட்சிக்கப்போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அமெரிக்க யோன் கொப்பிங் பல்கலைக்கழகத்தின் கொரிய – அமெரிக்க சற்லைற் அவதானிப்பு பிரிவு கடந்த ஏப்ரல் 30 ம் திகதி வடகொரிய ஏவுகணைகளை அவதானித்துள்ளது.
நுட்பமான இடைவிடாத அவதானிப்பில் வடகொரியாவின் இரகசியமான முயற்சிகள் பென் யோங் நகரத்தில் நடைபெறுவதை தமது சற்லைற் கண்டு பிடித்துள்ளதாக இப்பல்கலைக்கழகம் கூறுகிறது.
யாரும் எதிர்பாராத நேரத்தில் பரிசோதனைகளை செய்து, உலகத்தை ஏமாற்றி வடகொரியா அணு வல்லரசாக மாறிவிடும் என்றே கருதப்படுகிறது.
இதுபோல உலகத்தை ஏமாற்றும் வேலையில் கணிசமாக வெற்றி பெற்று படிப்படியாக முன்னேறி வருகிறது, சிரிய சர்வாதிகார ஆட்சி.
அந்த நாட்டில் :
யுத்த நிறுத்தக் கண்காணிப்பாளர் நிலை கொண்டாலும் அது பற்றி யாதொரு கவலையுமின்றி நேற்று முன்தினம் வடபுல சிரியாவில் உள்ள இட்லிப் நகரில் 20 பொது மக்களை நயவஞ்சகமாக கொன்று தள்ளியது சிரியப் படை.
அதைத் தொடர்ந்து நேற்று இரவோடு இரவாக கோம்ஸ் நகரத்தில் 15 அப்பாவிகளை கொன்றொழித்தது.
இந்தத் தகவல்கள் இங்கிலாந்தில் அம்பலத்திற்கு வர, இன்று கண்காணிப்பாளர் போன வாகனமே வீதிக் குண்டு தாக்குதலை சந்திக்க நேர்ந்தது.
டென்மார்க்கில் இருந்து போன கண்காணிப்பாளர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார், வாகனம் மட்டும் சேதமாக்கப்பட்டது.
தாக்குதலின் பின்னால் இருந்தது யாரென்று தெரியவில்லை.
சிறீலங்காவில் யுத்த நிறுத்தக் கண்காணிப்பு குழு போனது போலவே சிரியாவிற்கும் உளவறிய போயுள்ளதா என்ற சந்தேகம் சிரிய அரசுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
அலைகள்
0 Responses to வடகொரியா அடுக்கடுக்காக ஏவுகணைகளை பறக்கவிட முயற்சி