முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டினை நினைவேந்தும், மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள், கனடா- ரொறன்ரோவின் குவீன்ஸ் பார்க் திடலில் இடம்பெறுமென உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோவில் உள்ள ஒன்ராறியோ பாராளுமன்றத்தின் முன்பாக அமைந்துள்ள குவீன்ஸ் பார்க் திடலில், கனேடிய தமிழர் பொது அமைப்புக்களின் கூட்டிணைவில், இந் நிகழ்வு இடம்பெறவுள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மே-18ம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியிலிருந்து 8:00 மணி வரை இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளும் மே-12 முதல் இடம்பெற ஏற்பாடாகியுள்ளன.
சிங்கள பௌத்த பேரினவாத அரசினால் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவேந்தும் வகையில் ஏகாதச ருத்திர மகா யாகமொன்று இடம்பெறவுள்ளது.
இந்த மகா யாகம் ரொறன்ரோ-ஸ்காபுறோ ஐயப்பன் ஆலயத்தில் மே-13ம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 9மணிக்கு இடம்பெறவுள்ளது.
மே-12 முதல் 2761 மார்க்ம் வீதியில் உள்ள, சண் சிற்றி பிளாசாவில் இனப்படுகொலையினை வெளிப்படுத்தும் கண்காட்சியும் வைக்கப்படவுள்ளது.
மே-18ம் இடம்பெறவுள்ள தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வில் தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை முன்னிறுத்தி, முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களதும், கல்விமான்களும், மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்த அறிஞர்களதும் சிறப்புரைகள், இடம்பெறவுள்ளதாகவும் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.
மே 18 தமிழீழத் தேசிய துக்க நாள்! கனடாவில் குவீன்ஸ் பார்க்கில் நடைபெறும்! | தமிழீழ அரசாங்கம்
பதிந்தவர்:
தம்பியன்
09 May 2012
0 Responses to மே 18 தமிழீழத் தேசிய துக்க நாள்! கனடாவில் குவீன்ஸ் பார்க்கில் நடைபெறும்! | தமிழீழ அரசாங்கம்