Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேற்று முன்தினம் திங்கட்கிழமை ரஸ்யாவின் பிரதமராக இருந்த புற்றின் மறுபடியும் அதிபராகப் பதவியேற்று சத்தியப்பிரமாணம் எடுத்தது தெரிந்ததே.

இந்தக் கூத்தாட்டம் முடிய :

நேற்று செவ்வாய் இதுவரை காலமும் அதிபராக இருந்த டிமிற்ஜி மிடேவ் மறுபடியும் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதுவரை பல்லக்கில் இருந்தவர் பந்தம் பிடிக்க – பந்தம் பிடித்துக் கொண்டிருந்தவர் பல்லக்கில் ஏறியிருக்கிறார்.

ரஸ்ய ஏழைகள் இந்த இரண்டு புளி மூட்டைகளையும் பல்லக்கில் வைத்து முதுகு முறிய சுமக்கிறார்கள்.

கடந்த டிசம்பர் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சைபர் கிரைம் மூலம் புற்றின் தேர்தல் முடிவுகளை மாற்றி பெரும்பான்மை பலத்தை பெற்றிருந்தாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இப்போது அதே பாராளுமன்ற பெரும்பான்மையை பயன்படுத்தி தனது பினாமியான டிமிற்ஜி மிடேவிற்கு பிரதமர் பதவியை வழங்கியுள்ளார் புற்றின்.

ஆக இருவரும் மாறி மாறி குதிரையோடி ரஸ்யாவின் அதிகாரக் கட்டிலில் இருக்கப்போகிறார்கள்.

இதைவிட எதிரிகளை மண்டையில் போடுவதில் மன்னனான முன்னாள் ரஸ்ய சர்வாதிகாரி ஸ்டாலின் காலம் நன்மை மிக்கது போல தெரிகிறது.

இது இவ்விதமிருக்க :

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டா போட்டி ஆரம்பித்துவிட்டது, இன்று வெளியான கருத்துக் கணிப்பில் ஒபாமா ஏழு வீதம் முன்னணி வகிக்கிறார்.

சென்ற மாதம் வெளியான கணிப்புக்கள் ஒபாமா 47 வீதம் றொம்னி 43 வீதமுமாக இருந்தது, இப்போது ஒபாமா 49 வீதம் றொம்னி 42 வீதமாக இருக்கிறது.

மேலும் 50 வீதமான அமெரிக்க மக்கள் பராக் ஒபாமாவின் ஆட்சியை வரவேற்றுள்ளார்கள் 47 வீதமானவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர், இக்கணிப்பு 1131 பேரிடம் நடாத்தப்பட்டது.

மறுபுறம் :

சிறையில் இருக்கும் உக்ரேனிய முன்னாள் அதிபர் யூலியா ரிமோஸ்யெங்கோ தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

உள்நாட்டில் மருத்துவ சிகிச்சை பெற மறுத்த இவருக்கு தற்போது ஜேர்மனிய நரம்பியல் நிபுணர் ஒருவர் சிகிச்சை செய்யவுள்ளார்.

இதன் காரணமாக உண்ணாவிரதத்தை கைவிட்டு தற்போது கிழக்கு உக்ரேனில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவருடைய மகள் தெரிவித்தார்.

உக்ரேன் முன்னாள் அதிபர் அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் என்கிறது உக்ரேன் ஆட்சிப் பீடம் ஆனால் இது முற்று முழுதாக அரசியல் வேடம் என்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

முன்னர் சிறீலங்காவின் அதிபராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்தனா தேர்தலில் போட்டியிட பயந்து சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரின் குடியுரிமையை ஏழு வருடங்கள் பறித்த பின் தேர்தலில் வென்றது போன்ற கூத்தாட்டம் இதுவாகும்.

அதுபோலவே இப்பெண்மணிக்கும் ஏழு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எரி வாயு விவகாரத்தில் ஊழல் புரிந்தார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டாகும்.

இந்த வேடிக்கையை பார்த்து சிறீலங்காவின் சாவுகாசம் உக்ரேனையும் உதவாக்கரை அரசியலுக்குள் தள்ளியுள்ளது என்கிறார்கள் சில புலம் பெயர் தமிழர்.

அலைகள்

0 Responses to டிமிற்ஜி மிடேவ் பிரதமராக சத்தியப்பிரமாணம் | கூத்தாட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com