Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்த உலகத் தமிழினம் தயாராகி வரும் நிலையில் ஜேர்மனின் பேர்லின் Platz des 18.März வரலாற்றுச் சதுக்கத்தில் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜேர்மனிய தமிழர் பொது அமைப்புக்களின் கூட்டிணைவில் மே-18 நிகழ்வுகள் ஒருங்கு செய்யப்பட்டு வருவதாக நா.த.அரசாங்கத்தின் உள்துறை அமைச்சின் ஜேர்மன் செயலகம் தெரிவித்துள்ளது.

மே-18 வெள்ளிக்கிழமை பேர்லின் Platz des 18.März சதுக்கத்தில் மதியம் 14:00 மணிக்கு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

இப்பெரு நிகழ்வில் அனைத்து தமிழ் உறவுகளும் பங்கெடுத்துக் கொள்ளும் வண்ணம் ஜேர்மனியின் அனைத்து பிரதான நகரங்களிலும் இருந்து பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிங்கள பௌத்த பேரினாவ அரசினால் ஈழத்தமிழனத்தின் மீது நடந்தேறிய இனப்படுகொலையினை வெளிப்படுத்தும் வகையில் ஒளிப்படக் கண்காட்சி மற்றும் துண்டுப்பிரசுரங்கள் பரப்புரைகளும் இடம்பெறவுள்ளன.

இவ்வேளை முள்ளிவாய்க்கால் இனப்படுகொiலியில் உறவுகளை இழந்திருந்தார் அவர்களுடைய ஒளிபடங்களை இத்திடல்லில் கொண்டு வந்து நினைவேந்துமாறும் ஜேர்மன் வாழ் தமிழ் உறவுகளுக்கு வேண்டப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களை 0177 183 3873 / 0157 3853 0937 குறித்த இந்த தொடர்பிலக்கம் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to ஜேர்மன்-பேர்லின் நகரில் மே-18 தமிழீழ தேசிய துக்க நாள்!- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com