Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிரிய தலைநகர் டாமாஸ்கஸ்சில் இன்று வியாழன் அதிகாலை இரண்டு சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன, இதில் 40 பேர் பரிதாப மரணமடைந்து 170 பேர் படுகாயமடைந்தனர்.

குண்டு வெடிப்பில் சிரிய உளவுப்பிரிவின் கட்டிடங்களின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகாலை 07.30 மணியளவில் வேலைத்தலம் சென்று கொண்டிருந்தவர்களில் பலர் இந்த அனர்த்தத்தில் மாட்டுப்பட்டுள்ளனர்.

பல்வேறு போராளிக் குழுக்களுடன் தாம் போராடுவதாகவும், இது பயங்கரவாதத் தாக்குதலே என்றும் சிரிய தொலைக்காட்சி மணிக்கு மணி அலறிக் கொண்டிருக்கிறது.
சிரிய சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட்டின் பூரண கட்டுப்பாட்டில் இருக்கும் டமாஸ்கஸ் பகுதியில் கடந்த சில மாதங்களாக இதுபோன்ற தொடர் குண்டு வெடிப்புக்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன.

கடந்த ஏப்ரல் 27ம் திகதி நடைபெற்ற இதுபோன்ற குண்;டுத் தாக்குதலில் ஒன்பது சிரிய படைகள் இறந்து 26 பேர் படுகாயமடைந்தது தெரிந்ததே.

சென்ற ஆண்டு மார்ச் மாதம் அரசியல் சீர்திருத்தம் கோரி சிரியாவில் ஆரம்பித்த போராட்டங்களை சர்வாதிகாரி ஆஸாட் இரும்புக் கரம் கொண்டு அடக்கி வருகிறார், இதனால் இதுவரை 9000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியாவில் இரு தரப்பிற்கும் இடையே ஓர் உடன்பாடு வருவதற்கான மெல்லிய வெளிச்சம் தெரிவதாக இன்றைய காலைச் செய்திகள் தெரிவிக்க குண்டுச்சத்தம் காதுகளில் ஒலித்தது.
தற்போது..

ஐ.நாவின் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு நிலை கொண்டிருக்கும் வேளையில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இதற்கிடையில் டென்மார்க்கில் இருந்து பத்து யுத்த நிறுத்த கண்காணிப்பாளர் சிரியா செல்வதற்கான அனுமதியை ஐ.நா வழங்கியுள்ளது, இவர்கள் நாளை புறப்படுவார்கள்.
மேலும்…

சிரியாவிற்குள் அல் குவைடாவின் தாக்கம் இருப்பதால் பிரச்சனையை வேகமாக முடிக்க இயலாதிருப்பது கவனிக்கத்தக்கது.

சிரியாவில் ஏற்படப் போகும் மாற்றங்கள் பயங்கரவாத அமைப்பான அல் குவைடாவுக்கு கடுகளவும் உதவியாக அமையக் கூடாது என்பதில் மேலை நாடுகள் அதிக கவனம் செலுத்துகின்றன.

சிரிய பிரச்சனை தொடர்ந்தும் நீட்டமடைய இதுவே காரணமாகும்.
இந்தப் பிரச்சனைகள் தீர்க்க முடியாமல் இருப்பதற்கான பிரதான இரிசு ஈரானில் இருப்பதாக சந்தேககிக்கப்படுகிறது.

இதுபோன்ற தாக்குதல்களை அல் குவைடா தொடர்ந்து நடாத்த வேண்டுமென ஈரான் பின்லேடனுக்கு அழுத்தம் கொடுத்ததாக சென்ற வாரம் அமெரிக்காவில் செய்திகள் வெளியாகியிருந்தமை கவனிக்கத்தக்கது.

அடுத்த அபிஷேகம் ஈரானில் நடக்காமல் இந்த யாகத்தை முடிக்க இயலாது என்று மேலை நாட்டு செய்திகள் கொக்கரிக்கின்றன.

அலைகள்

0 Responses to இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு 40 பேர் பரிதாப மரணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com