ஐயா போர் நின்றதென்று படுத்தீர்
பத்து மணிக்கு படுத்து பகீரென
வயிறு பசிக்க பன்னிரெண்டு மணிக்கு
உண்ணாவிரதம் முடித்தீர்..
செத்தொழிந்த பின்னர் மறுபடியும்
ஈழம் கேட்க வீதிக்கு வந்தீர்..
இராசீவ் காந்தி ஈழம் தர எண்ணியதாய்
நேற்றுத்தான் எடுத்து விட்டீர் பாணத்தை
இந்திய இராணுவம் ஈழத்தில் நின்றபோது
இதை ஏனையா சொல்ல மறந்தீர்..
மனோகரா படத்துக்கு எழுதிய வசனத்தை
மாற்றி மாற்றி பேச மடையர் நாம்
மானமுள்ள தமிழரென்று நினைத்தோம்..
கடைசி நொடியிலும் கலைஞர் காப்பார்
என்று கருதி மண்ணோடு மண்ணாய்
போனவனின் மண்டையோட்டில் புகுந்த
வாடைக்காற்று உன் வண்டவாளத்தை பார்த்து
வாய்விட்டு சிரிக்குதையா..
ஆட்சி இழந்தால் ஈழமென கோலமிடுவாய்
ஆட்சிக்கு ஏறினாலோ இல்லை இல்லை
என்று சாலமிடுவாய்..
காட்சிக்கு காட்சி மாறி நடிப்பதால்
உன்னை கலைஞரென்றார்
முத்தமிழ் கலைஞரே முள்ளி வாய்க்காலுக்கு
மூன்றாண்டு..
தொப்புள் கொடி உறவே..
முழங்கிடு ஈழமென மூலை முடுக்கெல்லாம்
உம்மைப் போல் ஒருவருக்கு தொப்புள் கொடி
உறவாய் இருப்பதைவிட
சிங்களவன் கையால் சாவது மேலையா..
0 Responses to மே 18 | மறக்க முடியாத மனிதர்கள் | கலைஞர் ஐயா