உன்னை நம்பி.. உன் பேச்சால்
உலகை நம்பி..
முள்ளி வாய்க்காலில் முடக்குப்பட்டு
காயப்பட்டு புல்டோசரால் பீறிட்டு
மண்ணோடு மண்ணாய் போன தமிழன் குரல்..
வேரோடு அழித்துவிட்டார்
வேதனை இல்லை உன் முகத்தில்..
சமாதான தூதுவரென்றால் கடைசிவரை
வருவாரென்று நம்பிய தமிழ் மரபை
உன்னிலும் காண எண்ணிய பேதை..
உலக நாடு வருமென்று காத்திருந்து
ஊமையாகிப் போன பேதை..
முள்ளி வாய்க்காலில் புதைந்து
மூன்றாண்டு போய்விட்டது..
அக்கை – தங்கை எல்லாம் அலற அலற
பெற்ற பிள்ளை எல்லாம் துடிக்கத் துடிக்க
எதிரிகளால் கொல்லப்பட்ட போது..
என்னினமே ஏறிட்டு பார்த்தது வானை..
எரிக் சோல்கெய்ம் வருவாரென்று..
பிணத்திற்குள் வாழ்ந்தோம் பிணமானோம்..
முள்ளி வாய்க்காலுக்கு மூன்றாண்டு
பிணங்கூட பேசுது
பேச்சு வார்த்தைக்கு வந்தவரே
பேசாதிருப்பதென்ன..



0 Responses to மே 18 | மறக்க முடியாத மனிதர்கள் | எரிக் சோல்கெய்ம்