அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனுக்கு இலங்கை அரசாங்கம் அனுப்பி வைக்க உள்ள இரகசிய அறிக்கையினை நாட்டு மக்களுக்கு பகரங்கப்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவொன்று எதிர்வரும் 18ம் திகதி அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. இந்தக் குழுவினர் அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு இரகசிய அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளனர்.
இவர்கள் குறித்த அறிக்கையினை அமெரிக்காவிடம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜெனீவாப் பிரேரணைக்குப் பின்னர் அமெரிக்காவை எதிர்க்குமாறு பிரசாரம் செய்த இந்த அரசாங்கம் தற்போது அமெரிக்காவிடம் மண்டியிட்டு உதவி கோரி நிற்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு இரகசிய அறிக்கை