அதிமுக அரசு பொறுப்பேற்றதையொட்டி ஓராண்டு நிறைவு விழா நிகழ்ச்சி தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் அதிமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா சாதனைகளின் தொகுப்பு புத்தகங்களையும் சி.டி.களையும் வெளியிட்டார். ஓராண்டு சாதனைகள் பற்றிய 3 தொகுப்புகள் வெளியிடப்பட்டன. மேலும் சிறப்பு ஸ்டிக்கர்கள், குறும்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றையும் ஜெயலலிதா வெளியிட்டார்.
ஜெயலலிதாவுக்கு தலைமைச் செயலாளர் தமிழ்த் தாயின் வெண்கல சிலையை வழங்கினார். ஜெயலலிதாவுக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களும் அரசு உயர் அதிகாரிகளும் நேரில் வாழ்த்துத் தெரிவித்தனர்.
முன்னதாக சட்டப்பேரவைக்கு வந்த ஜெயலலிதாவுக்கு போயஸ் கார்டனிலிருந்து கோட்டை வரை வழியெங்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சட்டப்பேரவை கூடியதும் அதிமுக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி முதல்வர் ஜெயலலிதாவுக்கு உறுப்பினர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
0 Responses to அதிமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு!