தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதன் ஓராண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு அனைத்து முக்கிய செய்திதாள்களிலும் ஜெயலலிதாவின் ஓராண்டு சாதனைகள் குறித்த முழுபக்க விளம்பரங்கள் வெளியாகி உள்ளன. தமிழக பட்ஜெட்டில் விளம்பரங்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.25 கோடியில் சுமார் ரூ.15 கோடி வரை இன்றைய தின விளம்பரத்திற்கு செலவிடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஓராண்டு சாதனை நூறாண்டு முன்னேற்றம் என்ற தலைப்பில் 4 பக்கத்திற்கு இந்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல் இலவச மிக்சி, கிரைண்டர், தாலிக்கு தங்கம், ஆடு, மாடுகள் ஆகியன வழங்கியதற்கு தமிழக முதல்வருக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Responses to ஜெ., க்கு ரூ.25 கோடியில் விளம்பரம்