Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நமது முதல் அமைச்சரின் அறிவும் துணிவும் அவரை ஒரு நாள் இந்தியாவின் உச்ச சிம்மாசனத்தில் உட்கார வைக்கத்தான் போகின்றது. அப்போது ஈழம் என்னும் தேசம் எழுந்து உட்காரத்தான் போகின்றது. இவ்வாறு புகழாரம் சூட்டியுள்ளார் தமிழ்நாடு அரசாங்கத்தின் அமைச்சர்களில் ஒருவரான பா. வளர்மதி.

சென்னையில் நேற்று புதன்கிழமை 16ம் திகதி நடைபெற்ற அ.தி.மு.க அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தி வெற்றிவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு புகழாரம் சூட்டினார்.

தமிழ்நாடு சட்டசபையில் நடைபெற்ற ஜெயலலிதா அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தி விழாவில் அவரது அரசாங்கம் செய்த நல்ல திட்டங்கள் தொடர்பான படங்களும் விபரங்களும் அடங்கிய சி.டி ஒன்றும் வெளியிடப்பட்டது. சட்டசபை சபாநாயகர் மேற்படி சி.டியை முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

அமைச்சர் வளர்மதி தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,

நமது முதல்வர் ஜெயலலிதா இதுவரை எதற்கும் அஞ்சியதில்லை. முன்னைய ஆட்சியாளர்களி;ன் ஆதரவாளர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ரூபாய் 250 கோடிக்கு மேல் பெறுமதியுள்ள சொத்துக்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

நமது முதல்வருடைய அறிவும் ஆற்றலும் தான் அவரை அரசியலுக்கு அழைத்து வந்துள்ளது. அவருடைய அறிவும் துணிவும் இந்த சிம்மாசனத்தில் அமர்த்தியுள்ளது.

எதிர்காலத்தில் “அம்மா” அவர்கள் இந்தியாவின் உச்ச சிம்மாசனத்தில் ஒரு அமரத்தான் போகின்றார். அப்போது சுதந்திரப் பறவைகளின் பாட்டரங்கமாகத் முன்னர் திகழ்ந்து தற்போது அழுகுரல் கூடமாக மாறிவிட்ட தமிழ் ஈழம் மிகுந்த அழகோடு எழுந்து உட்காரும்” என்றார் அமைச்சர் வளர்மதி.

0 Responses to அழுகுரல் கூடமாக மாறிவிட்ட தமிழ் ஈழம் மிகுந்த அழகோடு எழுந்து உட்காரும்! | வளர்மதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com