Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காடு சுட எலி புறப்படும் என்பது தமிழ் பழமொழி.

இதுபோல தெற்கு ஐரோப்பிய நாடுகளில் பற்றியுள்ள பொருளாதார நெருக்கடி அங்கு இப்போது காட்டுத் தீ போல பரவியுள்ளது.

இதனால் எரியும் காட்டுக்குள் இருந்து எலிகள் புறப்படுவதைப் போல தெற்கு ஐரோப்பிய மக்கள் வடபுலமாக நகர்ந்து ஜேர்மனிக்குள் வகை தொiயின்றி நுழைந்து கொண்டிருக்கிறார்கள்.

தற்போது தெற்கு ஐரோப்பாவில் கிரேக்கம் – இத்தாலி – ஸ்பானியா – போத்துக்கல் போன்ற நாடுகளில் பொருளாதார மோட்டர் ஓயில் இல்லாமல் எரிந்து நாறி புகை கக்குகிறது.

மோசமான சிக்கலில் மாட்டுப்பட்டுள்ள கிரேக்கத்தில் இருந்து ஆளைவிடடா சாமி என்று 23.800 பேர் ஜேர்மனிக்குள் நுழைந்துள்ளார்கள், இது சென்ற ஆண்டுடன் ஒப்பிட்டால் 90 வீதமான அதிகரிப்பாகும்.

பொருளாதார பாலத்தில் வெடிப்புக் கண்டு கடலில் விழப்போவது போல தொங்கிக் கொண்டிருக்கும் இத்தாலியில் இருந்து 30.200 பேர் நுழைந்துள்ளனர், இது 23 வீத அதிகரிப்பாகும்.

என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறும் ஸ்பானியாவை விட்டு 20.700 பேர் ஜேர்மனி வந்துள்ளனர் இது 52 வீத அதிகரிப்பாகும்.

ஜேர்மனியே ஐந்து மில்லியன் மக்களை வேலையற்ற நிலையில் வைத்துக் கொண்டு, இரண்டாம் உலக யுத்த காலத்தில் கண்ட மோசமான வேலையற்ற நிலையை சந்தித்துள்ளது.

இந்த இக்கட்டான நிலையில் புதிதாக வரும் தெற்கு ஐரோப்பிய நாட்டு ஏழைகளை வைத்து ஜேர்மனி என்ன செய்வதென்பது தெரியவில்லை.

ஜேர்மனியும் – பிரான்சும் சேர்ந்திழைத்த பொருளாதார தவறுகளுக்கான பிரதிபலிப்புக்களே இவையாகும்.

மறுபுறம் தேர்தல் நடந்து ஒன்பது தினங்களாகியும் உடன்பாட்டுக்கு வரமுடியாத கிரேக்கத்தில் மறுபடியும் தேர்தல் வரும் யூன் 17ம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலுக்கு பின் கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிவிடுமென அஞ்சப்படுகிறது.

வட்டிக்கு வாங்கிவிட்டு செய்வதை செய் என்று வீரம் பேசும் தமிழர்கள் போல கிரேக்கமும் கடனை வாங்கிவிட்டு வீரம் பேச ஆரம்பித்திருக்கிறது.

இன்று கொலன்ட் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஐ.எம்.தலைவர் கிறிஸ்டீனா லாகிரேட் கிரேக்க அரசியல்வாதிகளை கண்டித்துள்ளார்.

கடனை வாங்கியபோது என்ன நிபந்தனைக்கு உட்பட்டு அதை வாங்கினார்களோ அதைக் கடைப்பிடிக்க வேண்டியது அவர்களுடைய கடமை என்று கூறினார்.

ஒலந்தவின் வரவு – கிரேக்கத்தின் முடிவு – ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத்திற்குள் பாரிய சூறாவளியை வீச வைக்கப்போகிறது.

தேர்தல் விவாதத்தில் பேசிய சார்க்கோஸி ஒலந்தவை பார்த்து திட்டும் போது பொருளாதாரத்திற்குள் தேவையற்ற சூறாவளியை வீச வைக்கப்பார்க்கிறாய் நீ ஓர் உதவாக்கரை என்று திட்டியது கவனத்திற்குரியது.

சூறாவளி வீடுள்ள பணக்காரனுக்கு ஆபத்து பிடுங்க எதுவும் இல்லாத பிச்சைக்காரனுக்கு அதனால் எந்த ஆபத்தும் இல்லை என்பது ஒலந்த கருத்து.

இனித்தான் நடக்கப்போகிறது கூத்து.

அலைகள்

0 Responses to பொருளியல் நெருக்கடியால் ஜேர்மனிக்குள் நுழையும் ஏழை மக்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com