Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முள்ளிவாய்காலில் சிங்கள அரசினால் ஆயிரக்கணக்கில் தமிழ்மக்கள் கொன்று அழிக்கப்பட்டு எங்கள் இதயத்தை விட்டு இன்றும் மறையாத வடுவாக இருக்கின்ற மே 18ம் நாளாகிய முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்து 3 வருடங்கள் ஆகிவிட்டது.

முள்ளிவாய்க்கால் பேரழிவில் இறுதி மூச்சு வரை நின்று போரடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களையும், மக்களையும் நினைவு கூரும் நிகழ்வு மே 19ம் நாளாகிய சனிக்கிழமை டென்மார்க்கில் Randes,Holbækநகரங்களில் நடைபெற்றன.

இந்நிகழ்வு பொதுச்சுடர்,தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பமானது. மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கும் சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து துயர்தாங்கி வந்த மக்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும் தம் உறவுகளுக்காகவும் மலர்தூவி சுடர் ஏற்ற. மாவீரர்கானங்கள் இசைத்துக்கொண்டிருக்க உணர்வுபூர்வமாக நடைபெற்றன.

மே18 இல் நடந்ததை வெளிக்காட்டும் நாடகங்கள் கவிதைகள், எழுச்சி நடனங்கள் என இளைய சமுகத்தினர் தமது உரம்பதித்த நிகழ்சிகளை வழங்கினார்கள்.

நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியதோடு தமிழர்களாகிய நாம். ஒற்றுமையாக எமது அடையாளத்தை என்றும் இழக்கமாட்டோம் எனும் உறுதியேற்போடு நிகழ்வுகள் யாவும் நிறைவேறின.

0 Responses to டென்மார்க்கில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவு நிகழ்வு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com