பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் 50 பைசா உயர்ந்தது. இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த மறு நாளே பெட்ரோல் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. டீசல்,சமையல் எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. விலையுயர்வை அடுத்து தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 77 ரூபாய் 5 காசாகிறது.
இதுவரை இல்லாத விலை உயர்வால் சாமானிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று பெட்ரோல் விலையு யர்வுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
விலை உயர்வால் நாட்டின் பொருளாதார நிலைமை ஸ்தம்பிக்கும் . எனவே விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசின் தவறான நிதி நிர்வாகமே பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என்று மம்தா குற்றம் சாட்டியுள்ளார். பெட்ரோல் விலை உயர்வுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் பெட்ரோல் விலை 7.50 காசு உயர்ந்தது
பதிந்தவர்:
ஈழப்பிரியா
24 May 2012
0 Responses to இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் பெட்ரோல் விலை 7.50 காசு உயர்ந்தது