பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியான St Denis Université Paris 8 பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை மையப்படுத்தி கவனயீர்ப்பு விழிப்பரங்கு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணைக்குழுவின் பிரதிநிதியும் அமைப்பின் செயலருமான ஜொனஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் இக்கருத்தரங்கு இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே இப் பல்கலைக்கழகத்தில் சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் திரையிடலும் கருத்துப்பகிர்வும் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது அதன் தொடர்சியாக இராண்டாவது நிகழ்வாக இந்த கவனயீர்ப்பு விழிப்பரங்கு இடம்பெற்றுள்ளது.
முள்ளிவாய்க்காலை குறியீடாக கொண்டு இலங்கைத்தீவில் தமிழர்கள் எவ்வாறு சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளினால் இனப்படுகொலைக்கு உள்ளாகி வருகின்றார்கள் என்பதனை விளக்கும் ஆதரபூர்வமான ஆவணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அவர்கள் இணையவழி காணொளி பரிவர்த்தனையூடாக கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜேர்மன் மக்கள் பிரதிநிதி இராஜேந்திரா நடராஜா அவர்களும் இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தார்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை | பிரான்ஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கவனயீர்ப்பு விழிப்பரங்கு!
பதிந்தவர்:
தம்பியன்
20 May 2012



0 Responses to முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை | பிரான்ஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கவனயீர்ப்பு விழிப்பரங்கு!