Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் குற்றம்சாட்டுவது முட்டாள்தனமானது என்று இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொன்சேகா விடுதலையான பிறகு தமது விட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, இறுதிப் போரின் போது அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படவில்லை. போர்க் குற்றம் தொடர்பான எந்த ஒரு கேள்விக்கும் சந்தேகத்துக்கும் பதிலளிக்க தாம் தயாராக இருக்கிறேன் என்றார்.

மேலும் ஐ.நா. உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகள் இறுதிப் போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது பற்றிய கேள்விக்கு, அதை நான் ஏற்க முடியாது. அப்படிச் சொல்வது முட்டாள்தனமானது என்றார். தமது விடுதலைக்கு நெருக்கடி கொடுத்த சர்வதேச நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பொன்சேகா கூறியுள்ளார்.

0 Responses to மீண்டும் முட்டாள் என்று நிறுவிய பொன்சேகா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com