Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கெல தொனிங்கிடம் பணம் கேட்ட ஒபாமா..

பதிந்தவர்: தம்பியன் 21 May 2012

அமெரிக்காவில் உள்ள சிக்காக்கோவில் நடைபெறும் நேட்டோ மாநாட்டில் பங்கேற்ற டென்மார்க் பிரதமர் கெல தொனிங் சிமித் நேட்டோ செயலர் ஆனஸ்போ ராஸ்முசனுக்கு ரோஜாப்பூ சரம் வீசி பாராட்டு தெரிவித்தார்.

முந்தைய தேர்தலில் கெல தொனிங் சிமித்தை தோற்கடித்து பிரதமரான ஆனஸ் போ ராஸ்முசனே இந்த நேட்டோ செயலர் ஆனஸ்போ ராஸ்முசன் என்பது தெரிந்ததே.

ஆகவே..

முறைப்படி பழைய அரசியல் கோபத்தை மனதில் வைத்து ஆனஸ் போ ராஸ்முசனை திட்டியிருக்க வேண்டிய கெல தொனிங் சிமித் அமெரிக்காவில் வைத்து பாராட்டியது டென்மார்க் அரசியல் வட்டகையில் முக்கிய செய்தியாகியுள்ளது.

மேலும் எதிர்வரும் 2014 டிசம்பர் ஆப்கானில் இருந்து நேட்டோ வெளியேறுகிறது.

அத்தருணம் ஆப்கானுக்கு வழங்க டென்மார்க் ஒப்புக் கொண்ட தொகையை மேலும் மூன்று மடங்காக உயர்த்தித் தருவதாகவும் டேனிஸ் பிரதமர் கெல தொனிங் சிமித் தெரிவித்தார்.

இதைக் கேள்விப்பட்ட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உச்சி குளிர்ந்து, அவரிடம் தனது சார்பிலும் நிதி உதவி கேட்டு விண்ணப்பித்தார்.

கடந்த 2010 ம் ஆண்டு பொருளாதார நெருக்கடி காரணமாக நேட்டோவினால் பறக்கவிடப்படவிருந்த ஆளில்லா விமானங்களுக்கான நிதியை டென்மார்க் வழங்காது நிறுத்தியிருந்தது தெரிந்ததே.

இப்போது நேட்டோவுக்கு மூன்று மடங்கு அள்ளிக் கொடுக்கும் சீமாட்டியே அந்த ஆளில்லா விமானங்களுக்கு தரவேண்டிய பணத்தையும் தரவேண்டுமென கேட்டுக் கொண்டார்.

வீண் புகழ்ச்சியால் வந்த வினை இது..

ஊரில் ஆத்தை பிச்சையெடுக்க பிள்ளை கும்பகோணத்தில் போய் கோதானம் கொடுத்த கதையாக உள்ளது கெல தொனிங்கின் செயல்.

நாட்டில் டேனிஸ் ஏழைகள் பொதி சுமக்க கெல தொனிங் அமெரிக்காவில் இவ்வாறு பேசியுள்ளதால் இந்த கும்பகோண பகடி அவருக்கு மிகவும் பொருந்துகிறது.

இதற்குக் காரணமென்ன :

தற்போது கெல தொனிங் சிமித் புதிதாக 32 வயதுடைய தோமஸ் யூல்டாம் என்பவரை தமது மேலதிக அரசியல் ஆலோசகராக நியமித்துள்ளார்.

அரசியல் முதுமாணி கற்கை கற்ற இவர் ஐரோப்பிய ஒன்றிய டென்மார்க் பிரதிநிதி நிக்கொலாய் வாமணனின் ஆலோசகராக இருந்தவர், அத்தோடு பிறைம்ரைம்ஸ் கொம்னிக்கேசன் நிறுவன ஆலோசகராகவும் இருந்தவர்.

இவரை ஆலோசகராக நியமித்த காரணத்தால் கெல தொனிங் சிமித் ஆனஸ்போவை பாராட்டி வஞ்சப்புகழ்ச்சி அரசியல் செய்துள்ளாரா என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.

நமக்கு ஒரு விடயம் பற்றி ஆழமாக தெரியாமல் வெறுமனே அரசியல் ஆலோசகர்களை வைத்து செயற்படுவதும், சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை அரசியல் செய்வதும் பொறுத்த நேரத்தில் காலை வாரிவிடும் என்பதை பல தலைவர்கள் உணர்வதில்லை.

இப்போது 2010 ல் ஆளில்லா விமானத்திற்கு வழங்காது வெட்டிய நிதியை எங்கிருந்து தேடுவது..?

ஐரோப்பாவில் மிசைல்ஸ் அமைக்கும் விடயத்தில் மிகப்பெரிய பொறிக்கிடங்கில் ஐரோப்பிய நாடுகளை ஆனஸ்போ சிக்குப்பட வைத்திருப்பது தெரியாது வீணான புகழ்ச்சியை உதிர்த்துள்ளார் கெல தொனிங் என்பதை மேலும் சில மாதங்களில் காதுகளில் கேட்க முடியும்.

0 Responses to கெல தொனிங்கிடம் பணம் கேட்ட ஒபாமா..

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com