கடந்த 1998 ம் ஆண்டு அமெரிக்க விமானமான பானாம் எயாரை லொக்கொபியில் குண்டு வைத்து தகர்த்த லிபிய உளவாளி மரணித்தார்.
அப்டில் பஸீற் அல் மெக்ராகி என்ற இந்த நபர் காலம் சென்ற கேணல் கடாபியின் உறவினரும் லிபிய உளவுப்பிரிவின் அதிமுக்கிய தலைவராகவும் இருந்தவர்.
லொக்கொபி குண்டு வெடிப்பு தொடர்பாக தேடப்பட்ட இவரை லிபியா பிரிட்டனிடம் கையளித்து பின் புற்று நோய் கண்டிருந்த காரணத்தால் இவர் திருப்பி ஒப்படைக்கப்பட்டார்.
காலஞ்சென்ற உளவாளி லிபியாவில் உள்ள அவருடைய வீட்டிலேயே புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார்.
படுத்த படுக்கையில் கிடந்த இவர் உயிருடன் போராடிக் கொண்டிருக்கவே கடாபியின் வரலாறு பரிதாபமாக முடிவடைந்தது.
கடாபியின் இழப்பால் மிகவும் நொந்து போயிருந்த இவர் சமீபகாலமாக மோசமான பாதிப்படைந்திருந்து நேற்று மரணமானார்.
மேற்கண்ட தகவலை இறந்தவரின் சகோதரர் அப்டுல் கக்கிம் வெளியிட்டார்.
செய்த வெளியானதும் :
இவருடைய மரணம் லொக்கொபி குண்டு வைப்பில் குடும்பங்களை இழந்தவர்களுக்கு ஆறுதலைத் தரும் என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோன் தெரிவித்தார்.
தம்மைப் பொறுத்தவரை சிறையில் இருந்து இவரை விடுதலை செய்யும் கொள்கைக்கு தாம் எப்பொழுதும் எதிர்ப்பு காட்டியதாகவும் கமரோன் தெரிவித்தார்.
ஆனால் கடாபியுடன் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரொனி பிளேயர் கொண்ட தொடர்பு – பின் நடந்த இவருடைய விடுதலை – லிபியாவில் பிரிட்டனின் எண்ணெய்க்குத அமைப்பு – கடாபியின் மேலை நாடுகளிலான பண முதலீட்டு ஊக்குவிப்பு யாவும் முடிய அவர் தறிக்கப்பட்டதும் தெரிந்ததே.
ஆக நீண்ட திட்டமிடுகையில் இந்த நாடகம் அரங்கேறி முடிந்துள்ளது, அதில் ஒரு வெற்று துருப்புச் சீட்டே காலஞ்சென்ற நபராகும்.
இவரைப்போல மேலை நாடுகளுக்கு எதிரான கூகோ ஸவாசும் தற்போது புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அது தனிக்கதை அம்ம..
அலைகள்
0 Responses to லொக்கொபி குண்டு தாக்குதல் நபர் லிபியாவில் மரணம்